நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம் 1 இந்த மாலை வேளையில் இந்த அருமையான கிறிஸ்தவ " ஜனங்களின் கூடுகையிலே, நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவைக் குறித்து உங்களிடத்தில் பேசும்படியாக கிடைத்துள்ள இந்த தருணத்தை நான் ஒரு மகத்தான சிலாக்கியமாகவேக் கருதுகிறேன், நாம் யாவரும் அவரைக் கனப்படுதவே இங்கு இருக்கிறோம். 2 டூசானிலும், பீனிக்ஸிலுமுள்ள முழு சுவிசேஷ வர்த்தகர் குழுக்களின் தலைவர்களான சகோதரன் டோனி மற்றும் சகோதரன் வில்லியம்ஸ் ஆகியோரோடு கூட இங்கிருப்பது அருமையாயுள்ளது. நாங்கள் கடந்த சனிக்கிழமை காலை அங்கே ஆராதனை நடத்தினோம், நிச்சயமாகவே அந்த ராமாதா சத்திரத்தில் அங்கே அது ஒரு மகத்தான தருணமாயிருந்தது. நாங்கள் இந்த மாதம் பத்தொன்பதாம் தேதியிலிருந்து மற்றொரு மகத்தான தருணத்தை அங்கு எதிர்பார்க்கிறோம். அங்கு தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்கு திரும்பவும் செல்வது என்னுடைய சிலாக்கியமாயுள்ளது. பத்தொன்பதாம் தேதியிலிருந்து துவங்கி தொடர்ந்து நான்கு இரவுகள் நமக்கு கூட்டங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வர்த்தக புருஷருடைய சர்வதேச சிறப்புக் கூட்டமோ இருபத்திரண்டு, இருபத்தி மூன்றாம் தேதிகளில் தொடங்குகிறது என்று நான் நினைக்கிறேன். எனவே நான் இருபத்திரண்டாம் தேதி வரை அங்கிருப்பேன். அப்பொழுது நான் அவர்களுடைய சிறப்புக் கூட்டங்களில் ஒன்றுஒன்று அல்லது இரண்டு இரவுகள் இருப்பேன் என்று நான் நினைக்கிறேன். ஆகையால் தேசத்தின் பல்வேறு பாகங்களிலுள்ள கிறிஸ்தவர்களோடு ஒன்று கூடி, கிறிஸ்துவைப் பற்றிய என்னுடைய உணர்வுகளையும், அன்பையும் அவர்களோடு வெளிப்படுத்தி, அவர்களோடு ஒன்று சேர்ந்து மகத்தான ஐக்கியம் கொள்ள எனக்கு கிடைக்கும் தருணமான இது ஒரு மகத்தான சிலாக்கியமாய் உள்ளது. நீங்கள் வழங்கிய அருமையான ஆகாரத்தை உண்டு மகிழ நான் இங்கு வராமல் போனதற்காக இப்பொழுது நான் வருந்துகிறேன். ஆனால் நான் நினைக்கிறேன்... 3 நான் இங்கே வெளியே சென்று ஜனங்களை நேர்முக பேட்டி கண்டும், வியாதியஸ்தருக்காக ஜெபித்துக்கொண்டும், பாதையில் யாருக்காகிலும் உதவி செய்யவுமே முயற்சி செய்து கொண்டு வருகிறேன். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த பழைய உலகமானது ஒரு சுகவீனமானதாய், அதிக வியாதியையும், தொல்லையையும் கொண்டதாய் உள்ளது. ஆனாலும் இவை எல்லாவற்றிற்கும் மத்தியில், இந்த காரியங்களுக்கு மேலாக, இந்த நெருக்கத்திற்கு அப்பால் நாம் நோக்கிப் பார்க்கக் கூடிய ஒருவர் நமக்கு இருப்பது ஒரு அற்புதமான காரியமல்லவா? 4 ஒரு உண்மையான கிறிஸ்துமஸ் இருந்திராவிடில் என்னவாயிருக்கும்? ஒரு உண்மையான கிறிஸ்துமஸ் இருந்திராவிடில், இன்றிரவு காரியங்கள் இருக்கிறவிதமாய் இருந்திருக்காது. ஒரு கிறிஸ்துமஸ் இல்லாமலிருந்திருந்தால், இரட்சிப்பே இருந்திருந்திருக்காது. இப்பொழுது நாம் மீண்டும் கிறிஸ்துமஸை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம், அதன் உண்மையான அர்த்தத்தை, கிறிஸ்துவின் பிறப்பை நாம் மாற்றியிருப்பதோ மிகவும் மோசமானதாக உள்ளது. கிறிஸ்துமஸில் உள்ள கிறிஸ்துவின் ஸ்தானத்தை சாண்டகிளாஸ் எடுத்துக்கொண்டது போன்று காணப்படுகிறது. கீரிஸ் கிரிங்கில் என்பவர் ஒரு கோணிப்பை நிறைய விளையாட்டுப் பொருட்களை தன்னுடைய முதுகில் சுமந்தவராய், ஒரு புகைபோக்கியின் வழியாய் இறங்கி வந்து முழு உலகையும் ஒரே இரவில் சந்திக்கிறார் என்ற ஒரு கட்டுக் கதையும் உள்ளது. அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் அதை உங்களுடைய பிள்ளைகளுக்கு கூற விரும்பினால் சரி. ஆனால், “பொய் சொல்லாதிருப்பாயாக” என்று வேதத்தின் வாயிலாக நான் கற்பிக்கப்பட்டிருக்கிறேன். ஆகையால் என்றாகிலும் ஒரு நாள் சாண்டா கிளாஸ் என்பதே கிடையாது என்பதை அவர்கள் கண்டறிந்து கொள்ளும்போது, இந்த இயேசுவும் சாண்டா கிளாஸைப் போன்ற காரியம் தானா?” என்று அவர்கள் உங்களைக் கேட்கப் போகிறார்கள். ஆகையால் என்னைப் பொறுத்தமட்டில் அப்படித்தான் ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன். அது உங்களுடைய கருத்தாய் இல்லாமலிருக்கலாம். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான்... நீங்கள் அதன் பேரில் பொய்யுரைக்கிறீர்கள் என்பதை அவர்கள் கண்டுபிடித்தால், அப்பொழுது மற்றது கூட ஒரு பொய்யாயிருக்கலாம் என்று என்றோ ஒரு நாள் அவர்கள் கூறப் போகிறார்கள். ஆகையால் அவர்களிடம் சத்தியத்தை, வெளிப்படையான உண்மையைக் கூறுங்கள். அப்பொழுது நீங்கள் என்ன பொருட்படுத்துகிறீர்கள், எப்படி என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஆகையால் வெளியே எவ்வளவு மோசமாக காணப்பட்டாலும், அவர்கள் அங்கே வெளியே என்ன செய்துகொண்டிருந்தாலும், கவலைப்படாமல், கிறிஸ்துமஸ் என்னவாயிருக்க வேண்டும் என்று கூறுவது நம்மை பாதிப்புக்குள்ளாக்கக் கூடாது. புரிகிறதா? 5 இருளில் தான் வெளிச்சம் சிறப்பாக பிரகாசிக்கிறது என்று நான் நினைக்கிறேன். இருள் அதிகமாகுந்தோறும், அது சிறு வெளிச்சமாயிருந்த போதிலும், கூடுதலாகப் பிரகாசிக்கிறது. வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் அது கவனிக்கப்படுவதில்லை. ஆனால் இருளாகும்போது, அந்த சிறு வெளிச்சம் அவ்வளவு அதிகமாகப் பிரகாசிக்கும். வெளிச்சத்திற்கு முன்னால் இருள் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருளைக் காட்டிலும் ஒளியானது அதிக வல்லமையுள்ளது, இருளானது அதற்கு முன்னால் நிற்கவே முடியாது. சூரியன் பிரகாசிக்க துவங்கும்போது, இருளானது நிற்க முடியாது, ஏனென்றால் சூரியன், சூரிய வெளிச்சம் அதிகப் பிரகாசமுள்ளதால், அது இருளை வெளியே விரட்டுகிறது. எனவே அது அங்கு இருக்கவே இருக்காது. 6 இந்த அந்தகாரம் சூழ்ந்த உலகம், என்றோ ஒரு நாளில் முழுவதும் வெளிச்சமாகப் போகிறது. நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது, அப்பொழுது நமக்கு ஒருபோதும் இருளே இருக்காது. அந்த நேரம் வரையில், நாம் இரவு நேரத்தில் வெளியே நோக்கிப் பார்க்கும்போது, சந்திரன் பிரகாசிப்பதை காண்பது போன்று... 7 சந்திரனும் சூரியனும் கணவனும் மனைவியும் என்றே கூறலாம். சூரியன் இல்லாதபோது, சந்திரன் சூரியனின் ஒளியை பூமிக்குப் பிரதிபலித்து சூரிய ஒளியை விட குறைவான ஒளியை தருகிறது. சூரியன் உதிக்கும் வரையில் சந்திரனின் ஒளியில் எப்படி நடமாட வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூரியனும் சந்திரனும் ஒன்றான பிறகு, சூரிய ஒளியும் சந்திர ஒளியும் யாவும் ஒன்றாயுள்ளது. 8 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையும் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் சரீரபிரகாரமாக பூமியில் இல்லாதிருக்கும் நேரத்தில், சபை அவருடைய வெளிச்சத்தைப் பிரதிபலித்து, இந்த அந்தகார நேரங்களில் இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். சாண்டாகிளாஸ் மற்றும் தெருக்களில் காணப்படும் அற்ப அலங்கரிப்பினைக் காணும்போது, "அது இயேசு கிறிஸ்துவின் பிறப்பேயன்றி, பரிசுத்த நிக்கோலஸின் விஜயம் அல்ல” என்றே நாம் கூச்சலிட வேண்டும். நாம் பயங்கரமான அந்தகார நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இப்பொழுதுதான் நம்முடைய வெளிச்சம் உண்மையில் பிரகாசிக்க வேண்டும். 9 இப்பொழுது, நாம் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கு முன்னர், நாம் அவருடைய வார்த்தை கனப்படுத்தலாமா என்று நான் இதைக் குறித்து வியப்புறுகிறேன். நாம் அவருடைய வார்த்தையை எப்படி கனப்படுத்துகிறோம்? நாம் அவருடைய வார்த்தையை வாசிப்பதன் மூலமும், அதன்பின்னர் அதை விசுவாசிப்பதன் மூலமே கனப்படுத்துகிறோம். இப்பொழுது, நாம் அதை வாசிக்க வேண்டும், “விசுவாசம் கேள்வியினால் வரும். ஆகையால் நாம் அதை வாசிப்பதன் மூலம் கனப்படுத்துவோமேயானால், அதன் பின்னர் நாம் வாசித்துள்ளதை விசுவாசிப்பதன் மூலம் நாம் அவரைக் கனப்படுத்துகிறோம். 10 ஆகையால் இப்பொழுது, முதலில் கனப்படுத்தும்படியாக, நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கையில், நாம் வேதத்தின் ஒரு பகுதியை வாசிக்கப் போகையில், நாம் நம்முடைய காலூன்றி எழும்பி நிற்போமாக. நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கையில் கனப்படுத்தவே எழும்பி நிற்கிறோம். நான் இன்றிரவு ஒரு சில நிமிடங்களுக்கு எங்கிருந்து பேச வேண்டும் என்று விரும்புகிறேனோ அங்கிருந்து வாசிக்கப் போகிறேன். அது பரிசுத்த மத்தேயுவின் புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட போவதாய் உள்ளது, கிறிஸ்துமஸ் சரித்திரம். பரிசுத்த மத்தேயு 2-ம் அதிகாரத்திலிருந்து நாம் இதை வாசிக்கிறோம்.ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லோரையும் கூடி வரச் செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: 11 நாம் இந்த வார்த்தையின் ஆக்கியோனிடத்தில் பேசுகையில், இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் தாழ்த்துவோமாக. 12 சர்வ வல்லமையுள்ள தேவனே, பரிசுத்த ஆவியினாலே, இந்தக் கடைசி நாட்களில் எங்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டுள்ள கிறிஸ்துவின் அன்பிற்காக இன்றிரவு நாங்கள் எங்களுடைய இருதயங்களின் ஆழத்திலிருந்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஒன்று கூடி உம்மை ஆராதிக்க எங்களுக்கு கிடைத்துள்ள சிலாக்கியத்திற்காகவும், என்றோ ஒரு நாள் நீர் உம்முடைய சபைக்காக வரப்போகிறீர் என்ற இந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதிக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இந்தக் காலத்தின் சுடர்களைப் பிரகாசிக்கிறவர்களாகவும், நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திற்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை வெளிப்படுத்த இங்கே ஆயத்தமாயிருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் ஆரம்பத்திலேயே உம்முடைய வார்த்தையை பகிர்ந்தளித்துவிட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் ஒவ்வொரு காலத்தையும் துவக்கத்திலிருந்து முடிவுமட்டுமாய் அறிந்திருக்கிறீர் என்றும், நீர் உம்முடைய வார்த்தையை அந்தந்த காலத்திற்கு பகிர்ந்து அளித்து விட்டீர் என்பதையும் அறிந்துள்ளோம். எப்படியோ, அது எப்படி நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அந்தக் காலங்கள் ஒவ்வொன்றிலும், நாங்கள் உம்முடைய வார்த்தையின் பேரில் பின்னோக்கிப் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் அபிஷேகம் உண்டாகி, அந்த வார்த்தையை நிறைவேற்றினதை நாங்கள் காண்கிறோம். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்களில், இந்தக் காலத்திற்கான ஒரு வாக்குத்தத்தமான வார்த்தையானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இங்கே பூமியில் உள்ள பரிசுத்த ஆவியானவர் இந்த நாளுக்காக, வேளைக்காக இப்பொழுது தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டுள்ள வார்த்தையை ரூபகாரப்படுத்துவதினால், அதை வெளிப்படுத்த, நிறைவேற்ற இருதயங்களை கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 13 நாங்கள் பின்னோக்கி ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பார்க்கும்போது, ஏதேன் தோட்டம் முதற்கொண்டே ஒரு இரட்சகர் வரப்போகிறார் என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்த வார்த்தையை, ஒருவர் வந்து தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றினார். அவருடைய ஜீவியம் தேவனுடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தினது, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருந்தார். தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. அவர் எல்லாத் தீர்க்கதரிசிகளும் உரைத்திருந்தவற்றிற்கும் பதிலும், பரிபூரணமுமாயிருந்தார். இப்பொழுது இன்றிரவு நாங்கள் அவருடைய பிறந்த நாளின் கொண்டாட்டத்தையே இங்கு மீண்டும் அணுகிக்கொண்டிருக்கிறோம். 14 கர்த்தாவே, எங்களுடைய தேசமும் கூட, ஏதோ ஒருஒரு விதமாகக் கூறப்பட்ட ஒரு பொய்யான பழங்கால கட்டுக்கதையினால் தன்னைச் சுற்றிக் கொண்டுள்ளதை நாங்கள் கண்டு வருந்துகிறோம். ஆனால் கர்த்தாவே, உண்மையான விசுவாசியோ அது தவறாயுள்ளது என்பதையும், மெய்யான ஜீவனுள்ள தேவனிடத்திலிருந்து ஜனங்களின் மனதைத் திருப்ப சத்துரு இதை செய்திருக்கிறான் என்பதை அறிந்துள்ளான் என்பதையும் நாங்கள் அறிவோம். 15 தேவனே, நாங்கள் கிறிஸ்துமஸ் வரலாற்றிற்குள்ளாக ஆராய்ந்து பார்க்கும்போது, இன்றிரவு அவருடைய பிரசன்னம் எங்களோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தராகிய இயேசுவே, இன்னும் தங்களுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளத வர்த்தகப் புருஷரோ அல்லது ஸ்திரியோ இன்றிரவு இங்கே இந்தக் கட்டிடத்தில் இருந்தால், இன்றிரவே, தேவனுடைய மேசியாவும், புறக்கணிக்கப்பட்டு நிந்திக்கப்பட்டவருமான இயேசுவை அன்று போல் இன்று தங்கள் சொந்த இருதயத்தை அவரைக் கிடத்தும் தொழுவமாக ஆக்கிக் கொள்ள அருள் புரிவீராக. அவர்கள் இன்றிரவு இங்கிருந்து செல்லும்போது, விடிவெள்ளி நட்சத்திரம் அவர்கள் மேல் தொங்கினவர்களாய் என்றாகிலும் ஒரு நாள் இவருடைய வெளிச்சத்தின் மூலம் யோர்தானைக் கடக்கும் வரையில் அவர்களுடைய பாதைக்கு வெளிச்சம் தரும்படி செய்வீராக. பிதாவே, இதை அருளும். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.நீங்கள் உட்காரலாம். 16 வழக்கமாகவே நான் நீண்ட நேரம் பேசுவதுண்டு. எனக்கு தொண்டை கரகரப்பாய் இருக்கிறபடியால், நான் இன்றிரவு பிரசங்கிக்க முயற்சிக்கமாட்டேன். ஆனால் நான் இந்த கிறிஸ்துமஸ் வரலாற்றைக் குறித்த சிறு நாடகத்தை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இதே வேதப் பகுதி வாசிக்கப்படுவதை நீங்கள் அநேக முறை கேட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை, அது வானொலிகளிலும், உங்களுடைய தொலைக்காட்சிகளிலும் வரும். உங்களுடைய சபைகளிலும், வர்த்தகப் புருஷராகிய உங்களுடைய அருமையான உத்தம் போதகர்கள் இந்த கிறிஸ்துமஸ் வரலாற்றைக் கூற நீங்கள் கேட்பீர்கள், சரியாகக் கூறினால் கிறிஸ்துமஸ் வரலாற்றைக் கூறுவார்கள். 17 இயேசு ஏன் பெத்லகேமில் பிறந்தார் என்று கடந்த சனிக்கிழமை பீனிக்ஸில் வர்த்தக புருஷருடைய சங்கத்தில் பிரசங்கித்ததைக் காட்டிலும் நான் இப்பொழுது சற்று வித்தியாசமாக அணுக விரும்புகிறேன். அவர் பெத்லகேமைத் தவிர வேறெந்த இடத்திலும் பிறந்திருக்க முடியாது, பாருங்கள், ஏனெனில் அது அவருடைய நாமத்தையும், அவர் என்னவாயிருந்தார் என்பதையும் உரைத்தது. பெத்லகேம் தேவனுடைய அப்பத்தின் வீடாய் உள்ளது என்பதை நாம் வேதவாக்கியத்தினூடாக நாம் கண்டறிந்தோம், அவர் தேவனுடைய ஜீவ அப்பமாயிருந்தார். வேறு வழியே இல்லாதிருந்தது... மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லோரும் பெத்லகேமிலே பிறந்திருக்கிறோம் என்பதையே அது நமக்கு அறிவுறுத்துகிறது. கிறிஸ்து தேவனுடைய பெத்லகேமாய், நித்திய ஜீவ அப்பமான அவருடைய வீடாய் இருக்கிறார். 18 இப்பொழுது, இன்றிரவு நாம் இதை ஒரு வித்தியாசமான வழியிலிருந்து அணுகப் போகிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்றிரவு, "நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்” என்றே என்னுடைய பாடப் பொருளைத் தெரிந்து கொள்ளப் போகிறேன். 19 இந்த சாஸ்திரிகள். நாம் இந்தவிதமான கருத்தினை உடையவர்களாயிருக்கிறோம். மூன்று சாஸ்திரிகள் இருந்தனர் என்று பாரம்பரியத்தினால் நமக்கு கூறப்பட்டுள்ளது, அதே சமயத்தில் அது உண்மையா என்று நாம் அறியோம். வேதம், “மூன்று ” பேர் இருந்தனர் என்று கூறவில்லை . அவர்கள் புறப்பட்டு வந்த இடமாகிய இந்தியாவில் ஊழியம் செய்யும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது, அவர்களோ முவராகவே பயணிக்கின்றனர். நாமோ இன்னமும் அவர்களை அவ்வாறேக் காண்கிறோம். நான் அண்மையில் இந்தியாவில் இருந்தேன். அவர்கள் தலைப்பாகையை அணிந்து, ஒருவருடைய தலை மற்றவரின் தலையோடு முட்டினாற்போல் சம்மணமிட்டு, பகல் நேரத்தில் வீதியில் அமர்ந்து, ஒரு பகற்கனவு காண்பது போல் அமர்ந்திருப்பர். அவர்கள் நேராக உட்காரமாட்டார்கள், அவர்கள் சம்மணமிட்டு அமருவர். அவர்கள் மூன்று பேராகவே பயணம் செய்கின்றபடியால் மூன்று சாஸ்திரிகள் இருந்தனர் என்பதை நாம் நம்புகிறோம் என்று நான் நினைக்கிறேன். 20 அவர்கள், "கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்” என்று கூறினர். வேறு வார்த்தைகளில் கூறினால், “இந்த காலத்திற்கான அவருடைய அடையாளத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்” என்பதாகும், அதாவது அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அது அவ்வண்ணமாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. 21 பாருங்கள், தேவனுடைய வார்த்தை நித்தியமானதாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம்பண்ணினார்.” ஆகையால் வார்த்தை ஒருபோதும் மாற்றப்பட முடியாது, அது நித்தியமானது. அது அச்சிட்டப்பட்ட எழுத்துவடிவில் உள்ள தேவனாய், வேதமாய், தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. 22 அவர் ஏதோ ஒரு நியமத்தைக் கொண்டு சபையை நியாயந்தீர்க்க வேண்டும். நாம் ஏற்பத்தியுள்ள ஏதோ ஒரு முறைமையின் நியமத்தைக் கொண்டு அவரால் நியாயந்தீர்க்க முடியாது, ஏனென்றால் நம்முடைய முறைமைகள் ஒவ்வொன்றும் மனிதனால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அது நியாயந்தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் இணங்க விரும்பாமல், “இல்லை, சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அங்கே தவறாயிருக்கிறீர்கள். எங்களுடையதுதான் சரி என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுவீர்களேயானால், அதேபோல் மற்றொரு நபரும், "எங்களுடையதே சரி” என்று கூறுவார். அப்படியானால் தொள்ளாயிரத்திற்கும் மேம்பட்ட வித்தியாசமான முறைமைகள் இருக்கும்போது, எந்த ஒன்று சரியானது? ஆகையால் தொள்ளாயிரத்துக்கும் மேம்பட்ட வித்தியாசமான முறைமைகளைக் கொண்டு தேவனால் சபையை நியாயந்தீர்க்க முடியாது. 23 ஆனால் ஒருவர் இருப்பார். அவர், “கிறிஸ்துவைக் கொண்டு, இயேசு கிறிஸ்துவைக் கொண்டு உலகத்தை நியாந்தீர்ப்பார்” என்று கூறினார். கிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார், ஆகையால் நாம் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவோம். 24 தேவன் ஒரு அடையாளத்தை முதலில் காண்பிக்காமல், எந்தக் காரியத்தையும் ஒருபோதும் செய்கிறதில்லை . அவர் முதலில் முதலில் தம்முடைய அடையாளத்தைக் கொண்டு பிரகடனம் செய்யாமல், ஒரு காரியத்தை செய்த குற்றத்தை எப்போதும் புரிந்ததில்லை . 25 இந்த சாஸ்திரிகள், "நாங்கள் கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்” என்றனர். அவர்கள் அதைக் கண்டபோது, அவர்கள் கிழக்கில் இருந்தனர், அது பாபிலோன், அது எருசலேமுக்கு கிழக்கில் உள்ளது. அவர்கள் இரண்டு வருடங்கள் கழித்து மேற்கை அடைந்து, "அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்” என்று கூறினர். 26 சாஸ்திரிகள் ஒரு முன்னனையில் கிடந்த ஒரு சிறு குழந்தையிடம் வந்தனர் என்றே கிறிஸ்தவ பாரம்பரியம் நமக்குக் கூறுகிறது. அது அப்படியல்ல. வேதம் அதற்கு முரணாயுள்ளது. வேதமோ, "அவர்கள் ஒரு பிள்ளையிடம் வந்தார்கள்” என்றுதான் கூறுகிறது, பாலகனிடத்தில் அல்ல. எனவே ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவரையும் கொன்று போட்டான். பாருங்கள், அவர்கள் அந்த இடத்தை அடைய எங்கிருந்து ஒட்டகத்தின் மேல் பிரயாணம் செய்ய வேண்டியதாயிருந்தது என்பதை கவனித்துப் பாருங்கள். எனவே அவர்கள் டைகிரீஸ் நதியைக் கடந்து பிரயாணம் செய்து அங்கு வந்தடைய இவர்களுக்கோ இரண்டு ஆண்டுகள் பிடித்தது. அவர்கள் கிழக்கில் இருந்தபோது, “நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள மேற்கிற்கு வந்திருக்கிறோம்” என்று கூறினர். . 27 இப்பொழுது கவனியுங்கள், கிறிஸ்துமஸ் இப்பொழுது மாற்றமடைந்துள்ளது. இப்பொழுது, உண்மையான கிறிஸ்துமஸ் தினம், நாங்கள். அது விவாதத்திற்குரியதாகிவிட்டது. ஏனென்றால் நாம் அதை அறியோம். நாம் கிறிஸ்துமஸ் தினத்தை அனுசரிக்கும் விதமோ, நீங்கள் அதை எப்போதாவது ஆய்ந்து படித்திருப்பீர்களேயானால், கிறிஸ்துமஸ் தினம் எப்பொழுது என்பதற்கு நாம் ரோமன் கத்தோலிக்க சபையினுடைய கருத்தையே எடுத்துக் கொண்டோம். உண்மையாகவே கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி டிசம்பர் மாதம் இருபத்தைந்தாம் தேதி பிறந்திருக்க முடியாது, ஏனென்றால் அந்த நேரத்தில் யூதேயாவில் முப்பது அடி உயரத்துக்கு பனி குவிந்திருக்கும், பாருங்கள், எனவே அவர்களால்... மேய்ப்பர்களால் மலையின் மேல் இருந்திருக்க முடியாது, அது இயற்கைக்கு முரணாயிருந்திருக்கும். அவர் இயற்கையைப் போன்றே வந்தார். 28 காரணம், தேவன் ஒரு பிரமாணத்தை உடையவராயிருக்கிறார், அந்த பிரமாணங்கள் மாற்றப்பட முடியாது. சூரியன் அஸ்தமிக்கிறது, அப்பொழுது நீங்களோ, "அது உதிக்காது” என்று கூறி விட முடியாது. அது உதயமாகிறது. கோடைக்காலம், குளிர்காலம் முதலானவை, தேவன் அவைகளை தம்முடைய பிரமாணத்தின்படி ஒழுங்குபடுத்தியுள்ளார். அவைகள் ஒவ்வொன்றும் பரிபூரணமாக கிரியை செய்கின்றன. 29 இப்பொழுது, ஆனால் அவர் ஒருகால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பிறந்திருப்பார். அவர் ஒரு ஆட்டுக்குட்டியாயிருந்தார். அவர் ஒரு ஆட்டுக்குட்டியாயிருப்பார் என்பதை மற்ற ஒவ்வொரு காரியமும் நிரூபித்தன. அந்தக் காரணத்தினால்தான் அவர் ஒரு முன்னணையில், ஒரு வைக்கோல் குவியலில் பிறந்தார், ஒரு வீட்டில் அல்ல; ஏனென்றால் ஆட்டுக் குட்டிகள் வெளியே வைக்கோல் குவியல் இருக்கும் இடத்திலே பிறக்கின்றன. வீட்டில் அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட கொண்டு செல்லப்பட்ட போது, அவர் வழி நடத்தப்பட்டார். நீங்கள் செம்மறியாடுகளை வழி நடத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இங்குள்ள ஆடுகளை வெட்டும் இடத்திற்குச் சென்றால், செம்மறி ஆடுகளை வழி நடத்த ஒரு வெள்ளாடு ஒன்றை அவர்கள் வைத்துள்ளனர். செம்மறி ஆடு தானாகவே செல்லாது, அது வழி நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு விதத்திலும் அவர் இயற்கைக்கு ஒத்ததாகவே அமைந்திருந்தார். எனவே அவர் ஆட்டுக்குட்டிகள் பிறக்கும் காலத்தில் பிறக்க வேண்டியதாயிருந்தது. அது ஏப்ரல் மாதம், பாருங்கள், அப்பொழுது தான் அவர் பிறந்தார். 30 ஆனால் கிறிஸ்தவமார்க்கம் ரோம் மார்க்கத்திற்குள் கொண்டுவரப்பட்டபோது, நிசாயாவில் அது கலக்கப்பட்டபோது, அப்பொழுது அவர்கள் ஜீபிடரை சூரிய தேவனாக வழிபட்டு வந்தனர், அது ரோமாபுரியின் சூரிய தேவன், அவனுடைய பிறந்த நாள்... ஏறக்குறைய டிசம்பர் மாதம் இருபத்தைந்தாம் தேதியாயிருந்தது. ஏனென்றால் ரோம சகாச விளையாட்டு நிகழ்ச்சிகள் டிசம்பர் இருபத்தியொன்றாம் தேதி தொடங்கி, இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் நீடித்தது, அது சூரிய தேவனுடைய பிறந்த நாளாயிருந்தது. ஆகையால் ரோம் அஞ்ஞான மார்க்கத்தை கிறிஸ்தவ மார்க்கத்துடன் இணைத்தபோது, அவர்கள், "நாம் அதை தேவனுடைய குமாரனின் பிறந்த நாளாகச் செய்து விடுவோம். அப்பொழுது நாம் எல்லோரும் அந்த விஷயத்தில் ஒத்துப் போய் விடலாம்” என்று கூறினர். பாருங்கள், அது ஒவ்வொரு முறையும் அவை சத்தியத்திற்கு விரோதமாக ஒப்புரவாகும் திட்டங்களாகவே அமைந்து வந்துள்ளன, அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. 31 எனவே அவர்கள் எல்லாவற்றையும் நுழைத்து விட்டதை இன்று நாம் காண்கிறோம், நம்முடைய பரிசுத்த நாட்கள் அனைத்துமே கறைபட்டுவிட்டன. நம்முடைய ஈஸ்டர், அது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாயில்லாமல், அது ஏதோ ஒரு விதமான ஒரு ஈஸ்டர் முயல் அல்லது ஒரு புதியத் தொப்பி, அல்லது அல்லது வேறேதோ ஒரு காரியம் அல்லது ஒரு சிறு இளஞ்சிவப்பு வாத்து போன்றதாய் உள்ளது. எவ்வாறு சாண்டாகிளாஸ் என்பதற்கும் கிறிஸ்துவின் பிறப்பிற்கும் சம்மந்தம் இல்லையோ, அது போன்று இவைகளுக்கும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் சம்மந்தமேயில்லை. ஆனால் அது உலகப் பிரகாரமானதாயுள்ளதே! வர்த்தக உலகம் இவைகளை எல்லாவிதமான சிக்கல்களுக்கும், குழப்பத்திற்கும் ஆளாக்கிவிட்டது. தேவன் இந்தக் காரியங்களை சுட்டெரித்துப் போட நீதிபராயிருக்கிறார் என்பதில் வியப்பொன்றுமில்லையே. அவர் அதைச் செய்யப் போகிறார், அவர் அதைச் செய்வதாக வாக்களித்தார். எனவே அது குழப்பத்திற்குள்ளாகத்தான் வேண்டும். அதற்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை, அது முடிந்துவிட்டது. 32 இப்பொழுது, நான் கூறினவிதமாகவே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அந்தகார நேரத்தில் கிறிஸ்தவர்கள் அந்த வெளிச்சத்தைப் பிடித்துக்கொண்டு, கிறிஸ்துமஸிற்கு ஒரு சத்தியம் உண்டு, அது தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பாய் உள்ளது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். கரு மேகம் கொண்ட கோபமுள்ள வானத்தில் தோன்றும் நெளிந்து வளையும் மின்னல் இருளிலும் வெளிச்சம் இருக்க முடியும் என்பதையேக் காண்பிக்கிறது. அந்தகார நேரத்தில் வெளிச்சம் இருக்க முடியும் என்றே அது நிரூபிக்கிறது. 33 இன்றிரவு நான் பேசிக் கொண்டிருப்பது சற்று வழக்கத்திற்கு மாறாக தென்படலாம், முக்கியமாக நான் எழுதி வைத்துள்ள குறிப்புக்களையும் வேத வாக்கியங்களையும் என் பிரசங்கத்தின்போது எடுத்துக் கூறுவேன். அநேகர் வேத வாக்கியங்களை குறித்துக் கொள்கின்றனர். இப்பொழுது இது சற்று வழக்கத்திற்கு மாறானது. ஆனால் நீங்கள் இதை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: தேவன் வழக்கத்திற்கு மாறானவர், தேவன் வழக்கத்திற்கு மாறான காரியங்களைச் செய்கிறார். அதுவே இன்றைக்கு நம்மிடையே உள்ள தொல்லையாய் உள்ளது, நாம் வழக்கமான காரியங்களிலே அதிகமாய் ஈடுபட்டுள்ளபடியால், வழக்கத்திற்கு மாறான ஏதோ ஒரு காரியம் நிகழும்போது, நாம்-நாம் நாம் அதற்கு புறம்பே இருப்பதால், என்ன சம்பவித்துள்ளது என்பதை நாம் அறியாமலிருக்கிறோம். தேவன் வழக்கத்திற்கு மாறானவைகளைச் செய்கிறார். வேதாகமத்தை வாசித்துள்ள எந்த மனிதனும் தேவன் எப்பொழுதுமே வழக்கத்திற்கு மாறானதைச் செய்கிறார் என்பதை அறிந்திருக்கிறான். 34 இந்த தம்முடைய குமாரனின் பிறப்பை, இவை யாவற்றையுமே தேவன் தாமே முன் கூட்டியே ஏற்பாடு செய்துவிட்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது நிகழும்போது, அது எப்பொழுது நிகழ வேண்டும், எப்படி நிகழ வேண்டும் என்பதை எல்லாம் தேவனால் தாமே முன் கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 35 கர்த்தர் தீர்க்கதரிசியைக் கொண்டு உரைத்திருந்த, "ராமாவிலே ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்பது நிறைவேறும்படியாக இந்த கொலையாளியான ஏரோது, ஒரு கொலைகாரனேயன்றி வேறல்ல, அந்த சிறு பிள்ளைகளை எல்லாம் கொன்று போட்டது இந்த நேரத்தில் நிகழ வேண்டியதாயிருந்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? பாருங்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசினம் நிறைவேறுவதற்காக ஒரு கொலையாளியான ராஜா அங்கு இருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால், தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் ஒரு வார்த்தையைப் பேசுகிறபோது, அது தேவனுடைய வார்த்தையாயிருந்தால், அது நிறைவேறியாக வேண்டும். அது எவ்வளவு காலம் நீடித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது நிறைவேறியே தீரும், ஏனென்றால் அது ஒரு வித்தாயுள்ளது. தேவனுடைய வார்த்தை விதைக்கிறவன் விதைக்கும் விதையாயுள்ளது என்று இயேசு கூறினார். ஆகையால் அது தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைக் கொடுக்க வேண்டும். இப்பொழுது இந்த கொலைகார ராஜா அந்தப் பிள்ளைகளைக் கொல்ல அந்த நேரத்தில் இருக்க வேண்டியதாயிருந்தது. 36 நாம் மற்றொரு காரியத்தைக் கவனிக்க வேண்டும், அதே சமயத்தில் அவன் ஜனங்களின் மேல் வரி சுமத்த வேண்டியதாயிருந்தது. அவ்வாறு செய்தது யோசேப்பையும், அவருடைய மனைவியையும் (அவனுக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளை) பெத்லகேமுக்கு வலுக்கட்டாயமாய்க் கொண்டு சென்றது. 37 காரியங்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். சத்துருவின் கிரியைகளும் கூட அவரைத் துதிக்கும்படிச் செய்துவிடுவார். கடிகாரம் சரியாக அடிக்க, "நாம் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்” என்று சில சமயங்களில் நாம் எண்ணுகிறோம். தேவனுடைய கடிகாரம் பரிபூரணமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, இயேசு சரியான நேரத்தில் இங்கிருப்பார். அவர் ஒரு விநாடி கூட தாமதிக்கமாட்டார். தேவன் கூறினதோ அதே விதமாக சரியாக சம்பவிக்கும். ஆகையால் நாம் அதைச் செய்தாலும், அல்லது நாம் அதைச் செய்யவில்லையென்றாலும், அது அதே விதமாக இங்கு இருக்கும், ஏனென்றால் தேவன் அதை உரைத்திருக்கிறார், அது அவ்வண்ணமாகவே இருக்கும். 38 இப்பொழுது இந்த ஏரோது தங்களுடைய பிறப்பிடத்திலிருந்து வெளியே சென்றுள்ள யாவரும் இந்த குடிமதிப்பு எழுத திரும்பி வர வேண்டும் என்று கூறினான் என்பதை நாம் கண்டறிகிறோம். அவன் இதைச் செய்தபோது, தான் ஏதோ ஒரு பெரிய காரியத்தை செய்துகொண்டிருந்ததாகவே அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அவன் யேகோவாவோடு சரியாக இசைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையோ அறியாமலிருந்தான். எத்தனை ஆசாரியர்கள் அந்த நேரத்தில் கர்த்தரின் நாமத்தில் ஏரோதை சபித்திருப்பார்கள்! எத்தனைபேர் அநேகமாக இரகசியமாய் எதிர்த்து நின்று, இந்த ரோமன், என்ன ஒரு... நம்மால் அவனைப் பற்றிப் பிடிக்க முடிந்தால், நாம் இன்னின்ன, இன்ன காரியத்தை செய்துவிடலாம்” என்று கூறியிருப்பர், ஆனால் அது தேவனுடைய திட்டத்தின்படி சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கவில்லை . 39 இன்றைக்கு சில சமயங்களில் நாம் கம்யூனிஸத்தையும் மற்ற இந்த எல்லாக் காரியங்களையும் சபிக்கிறோம். அது அதற்கு தகுதியானது என்றே நான் யூகிக்கிறேன். ஆனால் நீங்கள் மாத்திரம் சத்தியத்தை அறிந்திருப்பீர்களேயானால், அது தேவனுடைய கரத்தில் சரியாக, அது என்ன செய்யும் என்று அவர் கூறினாரோ சரியாக அதைச் செய்யும்படிக்கே கிரியை செய்து கொண்டிருக்கிறது. அவர் பாபிலோனை பூமியிலிருந்து எடுத்துப் போட ஏதோ ஒன்றை எழுப்பியாக வேண்டும். அவர் அதற்கான கருவியை தம்முடைய கரங்களில் வைத்துள்ளார். நீங்கள் வேதத்தை அப்படியேப் படித்துப் பாருங்கள், அவர் என்ன செய்யப் போவதாகக் கூறினார் என்பது அங்கு எழுதப்பட்டுள்ளது. 40 அந்த நாளிலிருந்த அந்த ஊழியர்கள் அந்த வார்த்தையை படித்து ஆராய்ந்திருந்தால், அது சம்பவிக்க வேண்டியதாயிருந்ததை அவர்கள் அறிந்திருப்பார்கள். 41 இப்பொழுது இந்த பெரிதான குடிமதிப்பு எழுதப்படும் காரியத்தில் எல்லா ஜனங்களும் தங்கள் பிறப்பிடத்திற்கு எப்படியாயினும் திரும்ப வேண்டும் என்று ராஜா கட்டளையிட்டான் என்று நாம் காண்கிறோம். இப்பொழுது, அது ஒரு பயங்கரமான காரியமாய்க் காணப்படுகிறது, அந்த ஏழ்மையான எளிய ஸ்தீரி, குழந்தையை வயிற்றில் சுமந்தவளாய், தான் இருந்த இடத்திலிருந்து நீண்ட பிரயாணம் செய்ய வேண்டியதாயிற்று. இன்றைக்கோ நாம் அவளை நோயாளிகளின் மருத்துவ வாகனத்தில் கூட கொண்டு செல்ல நாம் யோசிக்கமாட்டோம். அவள் செல்ல வேண்டியதாயிருந்தது. நீங்கள் எப்பொழுதாவது பாலஸ்தீனாவுக்குச் சென்றிருந்தால், அவள் ஒரு சிறு கோவேறு கழுதையின் மேலேறி சென்ற பாதை கரடு முரடான, கற்பாறை குண்டுகளால் நிறைந்திருப்பதை கண்டிருப்பீர்கள். அது எவ்வளவு மோசமாக இருந்த போதிலும் கவலைப்படாமல், அது எவ்வளவு கொடூரமானதாய்த் தென்பட்ட போதிலும், அதுவோ ராஜாவின் கட்டளையாயிருந்தது. ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும், வாலிபரானாலும் அல்லது வயோதிகரானாலும், ஆயத்தமாயிருந்தாலும் அல்லது ஆயத்தமாயில்லாமற்போயிருந்தாலும், எப்படியும் அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. 42 சில நேரங்களில் நம்முடைய பாரங்களை நாம் எண்ணிப் பார்க்கிறோம். நான் இதை இங்கே புகுத்த விரும்புகிறேன், சில நேரங்களில் நம்முடைய பாரங்கள் மிகவும் பாரமாயுள்ளதையும், உலகில் அதைப் போன்று வேறெதும் இல்லை என்றும் நாம் எண்ணுகிறோம். அந்தக் காரியங்கள் யாவும் உங்களுக்கு நன்மையாயிருக்கின்றன என்று நீங்கள் அறிவீர்களா? அவை யாவும் உங்களை வார்ப்பித்து உருவாக்குவதற்காகவேயாகும். தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் பாலைவனத்தில் பயங்கரமான சுட்டெரிக்கும் சூரிய உஷ்ணத்தில், உபத்திரவங்கள், சோதனைகள், துன்புறுத்தல்கள் போன்றவைகளின் மூலம் வார்ப்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டனர். இன்றைக்கு நமக்கு உள்ள இந்தக் காரியங்கள் இதற்கு முன்பு இருந்த மற்ற கிறிஸ்தவர்களுக்கு நேரிடாதது ஒன்றும் நமக்கு நேரிடவில்லை. மற்ற கிறிஸ்தவர்கள் இதைப் போன்ற அந்தகார வேளையில் நிற்க வேண்டியதாயிருந்தது, தங்களுடைய சாட்சிக்காக சிங்கங்களுக்குக் கூட இரையாக்கப்பட்டனர். 43 நாமோ சற்று கெளரவமுடையவர்களாய் அல்லது நம்மை யாரோ ஒருவராக பெரிதாக எண்ணி, "நல்லது, நல்லது, நான் இன்னின்னதைச் சேர்ந்தவன், இந்த குறிப்பிட்ட சபையை நீங்கள் அறிவீர்கள். நான்... நிந்தையை கொண்டு வந்து விடுவேனோ என்று நான் பயப்படுகிறேன்” என்கிறோம். 44 இயேசு கிறிஸ்துவிற்கான உங்களுடைய சாட்சியைக் குறித்துப் பயப்படாதீர்கள். உங்களுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள். “அவர் தேவனுடைய குமாரனாயிருக்கிறார். இது கிரிங்ல், கிரிஸ் கிரிங்லின் ஒரு இரவு விஜயம் அல்ல, ஆனால் அது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பிறப்பாய் உள்ளது” என்னும் உங்களுடைய திட நம்பிக்கையில் உறுதியாய் நில்லுங்கள். புரிகிறதா? இப்பொழுது அந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றதை நாம் கண்டடைகிறோம். 45 ஒரு ஆலயமணி அடிப்பதற்காக, பிரபலமான ஆலயமணி ஒன்று ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புவதற்காக, அவர்கள் அதை வார்ப்பித்து உண்டாக்குவதை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? ஒவ்வொரு மணியும் ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புகிறது என்பதை நீங்கள் ஆலய மணியினை அடிக்கும்போது நீங்கள் பார்க்கலாம். அதை சில பொருட்களை கலந்து வார்ப்பிக்க வேண்டும், இவ்வளவு பித்தளை, இவ்வளவு உருக்கு இரும்பு, இந்த அளவு மற்ற கனிமபொருட்கள் என்னும் கலவை இந்த மணியில் செல்ல வேண்டும். அது வெறுமென பித்தளையை உபயோகித்து வார்ப்பிக்கப்பட்டால், அது சரியாக ஒலிக்காது. அது சரியான ஒலியின் ஓசையை எழுப்ப, எல்லாவிதமான பொருட்களாலும் அது வார்ப்பிக்கப்பட வேண்டும். அதை வார்ப்பிக்க, வார்ப்பை ஆயத்தம் பண்ணின மனிதன் வார்ப்பு உருக்கியில் என்னென்ன உலோகங்களைக் கலந்து உருக்கி வார்த்தால், அந்த மணி அந்த குறிப்பிட்ட ஒலியினை எழுப்பும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். 46 தேவனே நம்முடைய மகத்தான வார்ப்பு உருக்கியாயிருக்கிறார். தேவனே.. அவரே புடமிடுபவரின் மகத்தான எரிகிற சூளையாவார், அவர் இப்படிப்பட்ட இந்தக் காரியங்களான சோதனைகளையும், உபத்திரவங்களையும் நம்மேல் கொண்டுவந்து, நம்மை உருக்கி வார்ப்பித்து, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காக நம்முடைய சாட்சியை உருவாக்கி, அவர் விரும்புகிற ஒரு குறிப்பிட்ட நாளில் அதைக் குறிப்பிட்ட ஒரு தொனியில் தொனிக்கப் பண்ணுகிறார். 47 நாம் வித்தியாசமானவர்களாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நாம் யாவரும் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நாம் வித்தியாசமாகக் காண்கிறோம். ஆனால் யாவரும் ஒரு காரியத்தைக் காண்கிறோம், அது இயேசு கிறிஸ்துவாகும். நாம் அவரை நோக்கிப் பார்ப்போமாக. நீங்கள் அவரைக் காணக் கூடிய ஒரே வழி... அவர் இந்த வார்த்தைக்கு முரணாக காணப்படுவாரேயானால், நீங்கள் அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் அது அவராகும். ஆகையால் நீங்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தையோ நோக்கிப் பார்த்து, "நான் அதைச் சேர்ந்தவர், அது போதும்” என்று நினைக்கலாம். அது அந்த வார்த்தையை நோக்கிப் பார்க்காவிட்டால், அப்பொழுது அதினின்று உங்கள் பார்வையைத் திருப்புங்கள். அந்த வார்த்தையை நோக்கிப் பாருங்கள்! அதைத்தான் நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம், கிறிஸ்துவை, தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் தேவனுடைய வார்த்தையின் ரூபகாரப்படுத்துதலாய் இருக்கிறார். 48 இப்பொழுது, இந்த மகத்தான எல்லாக் காரியங்களும், இந்த சிறு தம்பதிகளுக்கு அங்கே சம்பவித்தன, அது விநோதமாகத் தென்படலாம். ஆனால் அது அவர்களுக்கு விநோதமாகத் தென்படலாம், ஆனால் அவையாவும் நன்மைக்கேதுவாக கிரியை செய்து கொண்டிருந்தன. 49 இப்பொழுது யோசேப்பினுடைய சொப்பனத்தைக் குறித்து நான் சற்று நேரம் பேச விரும்புகிறேன். அதற்கான வேதவாக்கியத்தை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். தேவன் எல்லா நேரங்களிலும், எல்லாக் காலங்களிலும் அவருடைய ஜனங்களுடன் பேசி, அவரை சொப்பனங்களின் மூலமாக வெளிப்படுத்தினார். 50 இப்பொழுது சொப்பனங்கள் உறுதியானவையல்ல. எல்லா சொப்பனங்களும் தேவனிடத்திலிருந்து வந்தவை அல்ல. இப்பொழுது, அநேகர் சொப்பனங்களைக் காண்கின்றனர். அவர்களுக்கு எல்லா விதவிதமான சொப்பனங்களும் உண்டாகின்றன. நீங்கள் இரவிலே படுக்கைக்குச் செல்லும்போது, விதவிதமான சொப்பனங்கள் உண்டாகின்றன. பெரிய இரவு ஆகாரத்தைப் புசித்து விட்டு படுக்கைக்குச் சென்றால், நீங்கள் எந்தக் காரியத்தையும் சொப்பனமாகக் காணலாம். உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதன் விளைவாக நீங்கள் எல்லாவிதமான தீய கனவுகளையும் காணலாம், அது தேவனால் உண்டானதல்ல. ஆனால் அதே சமயத்தில் தேவன் சொப்பனங்களினூடாக ஜனங்களோடு தொடர்பு கொள்கிறார். 51 நாம் யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பை துவக்கத்தில் காண்கிறோம், அவன் எவ்வாறு துவக்கத்தில் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஒரு தீர்க்கதரிசி சொப்பனங்களை புரிந்து கொள்வான். இப்பொழுது, ஒரு சொப்பனம் வியாக்கியானிக்கப்படும்போது, அப்பொழுது அது ஒரு தரிசனமாகிறது, அது ஒரு தீர்க்கதரிசனமாயிருக்கிறது. 52 இப்பொழுது அதற்கு முன்பு இராஜாவாகிய நேபுகாத் நேச்சார், தானியேல் இவர்களின் காலத்திலும், முன் காலங்களிலும் தேவன் ஜனங்களுடன் சொப்பனங்களின் மூலம், ஆவிக்குரிய சொப்பனங்களின் மூலம் தொடர்பு கொண்டாரென்று நாம் கண்டறிகிறோம். நான் அவைகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். நாம் அவைகளை இப்பொழுது உடையவர்களாயிருக்கிறோம். எத்தனையோ முறை, நூற்றுக்கணக்கானவர்கள் கண்ட சொப்பனங்களுக்கு சரியான அர்த்தம் உரைக்கப்பட்டு, அவை சரியாக அப்படியே சம்பவித்துள்ளன என்று என்னால் சாட்சி பகர முடியும். 53 ஆனால் ஒரு சொப்பனம் ஒருவிதமான ஒரு ஒரு கட்டுக் கதையைப் போன்றது. இப்பொழுது, ஒருமுறை மருத்துவப் பரிசோதனையின்போது, சொப்பனங்களைக் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் உள்ளத்தின் அரை உணர்வுத்தளத்தில் இருக்கும் போது ஒரு சொப்பனத்தைக் காண்கிறோம் என்று நமக்குக் கூறப்படுகிறது. இப்பொழுது ஒரு நபருக்கு சுய நினைவு உள்ளது. இந்த சுய நினைவில் உங்கள் ஐம்புலங்களான பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்பவை கிரியை செய்கின்றன. ஆனால் நீங்கள் உறங்கச் செல்லும்போது, அந்த ஐந்து...புலன்களும் வேலை செய்கிறதில்லை. அப்பொழுது நீங்கள் உங்களுடைய உள்ளத்தின் அரை உணர்வில் இருக்கிறீர்கள். அது உங்களை வெகு தூரத்திற்கு கொண்டு சென்று விடுகிறது, அப்பொழுது நீங்கள் அங்கே அந்நிலையை அடைந்து சொப்பனங் காண்கிறீர்கள். ஆனால் நீங்கள் திரும்பி வந்து, உறக்கத்தினின்று எழுந்து,...வாழ்க்கையில் ஒரு முறையாவது சொப்பனங் கண்டு, அதை இன்னமும் ஞாபகம் வைத்திராதவர் ஒருவர் கூட, ஒருவர் கூட இங்கு இல்லை என்பதில் சந்தேகமேயில்லை. ஆகையால் உங்களில் ஏதோ ஒரு பாகம் எங்கோ உள்ளது, எனவே நீங்கள் உங்களுடைய சுய நினைவிற்கு திரும்பி வரும்போது, அப்பொழுது அந்த சொப்பனத்தை உங்களால் இன்னமும் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது. அது ஒருகால் அநேக ஆண்டுகளுக்கு முன்பு உண்டான சொப்பனமாயிருக்கலாம். நான் சிறுபையனாயிருந்தபோது கண்ட சொப்பனங்களை இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் அவைகளை இன்னமும் நினைவு கூறுகிறேன். அப்படியானால் என்னில் ஒரு பாகம் எங்கோ இருக்க வேண்டும், அது எங்கோ இருந்தது. இப்பொழுது, அதுதான் சொப்பனங்கள், ஆகையால், நீங்கள் பாருங்கள், நீங்கள் உங்கள் புலன்களிலிருந்து தூரமாய் விலகியிருக்கிறீர்கள். அவைகள் திரும்பி வரும்போது, நீங்கள் கண்ட உங்களுடைய சொப்பனத்தை அது உங்களுக்குக் கூறுகின்றது. அது தேவனால் உண்டாயிருந்தால்... 54 சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைப்பவர் இருக்கக் கூடும். வேதமோ, “உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாக, தீர்க்கதரியாயிருந்தால், கர்த்தராகிய நான் சொப்பனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, தரிசனத்தின் மூலம் அவனோடே பேசுவேன்” என்று உரைக்கிறது. 55 இப்பொழுது யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு அப்படிப்பட்ட மாதிரியைக் கொண்ட ஒரு மனிதனாயிருந்தான் என்று நாம் கண்டறிகிறோம். அதாவது அவர்கள் சொப்பனங்களைக் காண்பார்கள், அதன் பின்னர் அவன் அதற்கு அர்த்தம் உரைப்பான். அவனால் சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைக்க முடிந்தது, அவன் தரிசனங்களைக் கண்டான். அவை அனைத்துமே ஆவியின் கிரியையாகும். 56 இந்த காரியத்தில், ஒரு மனிதன் ஞானதிருஷ்டிக்காரனாக இருக்கப் பிறந்து அல்லது தரிசனங்களைக் காண்பானானால், நீங்கள் நீங்கள்... நீங்கள் அதற்கு தேவனால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 57 கவனியுங்கள், இங்கே உள்ளது உங்களுடைய உள்ளான அரை உணர்வு, இயற்கையானது, இங்கே உள்ளது உங்களுடைய சுய நினைவு. இப்பொழுது நீங்கள் உங்கள் புலன்களிலிருந்து, ஐம்புலன்களிலிருந்து வெளிவந்து, உறக்கத்திற்குள்ளாகும்போது, உள்ளான அரை உணர்வுக்குள்ளாகி, அதன்பின்னர் மீண்டும் சுய நினைவிற்கு திரும்பி வருகிறீர்கள். அது தான் ஒரு சொப்பனம். 58 ஆகையால் ஒரு ஞான திருஷ்டிகாரனுக்கு இரண்டு நினைவுகளும் ஒன்றாகவே உள்ளன. நீங்கள் இந்த ஐம்புலன்களிலிருந்து விடுபடுகிறதில்லை, நீங்கள் இன்னமும் ஐம்புலன்களிலே இருந்துகொண்டு, அங்கே நின்று கொண்டு, என்ன சம்பவிக்கிறது என்று காண்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் ஒருபோதும் உங்களுடைய புலன்களிலிருந்து விலகிச் செல்கிறதில்லை. நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும், பேசுகின்ற உங்களுடைய வார்த்தையையும் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது அது ஒரு ஒரு முன்குறிக்கப்பட்ட வரமாய் உள்ளது. "தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.” பாருங்கள், தேவன் அதைச் செய்கிறார். நீங்கள் உறங்கச் செல்லுகிறதில்லை. நீங்கள் இரு கண்களும் திறந்தவர்களாய் நின்று கொண்டு, நீங்கள் பார்ப்பதையே நேராகப் பார்க்கிறீர்கள். புரிகிறதா? ஒரு-ஒரு தரிசனம் உண்மையாகவே தேவனால் உண்டாகிறது. 59 நாம் இன்றைக்கு உறங்குகிறோம். இன்றைக்கு உலகத்தோடு உள்ள தொல்லை அதுவேயாகும், அது உறங்கிக்கொண்டிருக்கிறது. அநேக ஜனங்கள் உறங்குவதற்குப் பிரியப்படுகின்றனர். ஆனால் நான் இதைக் கூறுகிறேன், பரலோகத்தில் படுக்கைகளேக் கிடையாது. நாம் பரலோகத்திற்குச் செல்லும்போது, நாம் உறங்கமாட்டோம், ஏனென்றால் அங்கு இரவே இருக்காது. அங்கு இரவு என்பதேக் கிடையாது. ஆகையால் நீங்கள் பரலோகத்திற்குச் செல்லும்போது, நீங்கள் உறங்க வேண்டியதேயிருக்காது, ஏனென்றால் அங்கே படுக்கைகளேக் கிடையாது. 60 ஆனால் கவனியுங்கள், நம்முடைய- நம்முடைய சுய நினைவு, நாம் தேவனிடத்தில் நம்முடைய ஒவ்வொரு பாகத்தையும் சமர்ப்பிப்போமேயானால், அப்பொழுது அவரால் நம்முடைய ஒவ்வொரு பாகத்தையும் உபயோகிக்க முடியும். நமக்குள்ள ஒவ்வொரு காரியத்தையும், அவை தேவனுடைய கரங்களில் முழுமையாக கொடுக்கப்படும்போது, அவருடைய ஊழியத்திற்கென்று மாற்றப்படும்போது, அவரால் நம்மை சொப்பனங்களில் உபயோகிக்க முடியும், அவரால் நம்மை பேச்சில் உபயோகிக்க முடியும், அவரால் நம்மை எல்லா புலன்களிலும் உபயோகிக்க முடியும். நாம் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும் தேவனுக்கென்று மாற்றும்போது, அப்பொழுது தேவனால் நம்மை உபயோகிக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், நமக்குள்ள ஒவ்வொரு காரியமும் அவருக்கு மாற்றப்படுகின்றபோது, அவரால் அதை உபயோகிக்க முடியும். நம்முடைய அனைத்துமே மாற்றப்படுகின்றபோது, அப்பொழுது கிறிஸ்தவர்களால் இந்த நாளிலும், ஏதோ ஒரு காரியத்தை பொருட்படுத்தக் கூடிய ஆவிக்குரிய சொப்பனங்களை, காரியங்களை அவர்களுக்கு முன்னறிவிக்கக் கூடிய சொப்பனங்களைக் காண முடியும். அது உண்மை என்பதை நாம் அறிவோம். 61 ஒரு ஆவிக்குரிய சொப்பனத்துக்கு அர்த்தம் உரைத்தால், சரியான அர்த்தம் உரைத்தால், அதுவும் ஒரு தரிசனமும் ஒன்றே. தரிசனம் என்றால் என்ன? எதிர்காலத்தில் நடக்க விருக்கும் சம்பவங்களை முன்கூட்டி அறிவிப்பதே ஒரு தரிசனம். அது நடப்பதற்கு முன்பே அதை முன்னுரைக்கிறது. அந்த விதமாகத்தான் தேவன், அது உண்மையா இல்லையாவென்றும், (பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்த) ஒரு மனிதன் தீர்க்கதரிசி தானா என்பதையும் நிரூபிக்கிறார். அவன் உரைத்தது நிறைவேறுவதன் மூலம் அதை எப்பொழுது ரூபகாரப்படுத்தினார். அந்த மனிதன் முன்னுரைத்தது ஒவ்வொரு முறையும் நிறைவேறிக் கொண்டே வந்தால், அவன் தீர்க்கதரிசியென்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அந்த மனிதனின் மேல் கைகளை வைத்து, அவனைக் குலுக்கி, அவனுக்கு ஒரு ஒரு வரத்தைக் கொடுக்க முடியாது. அவன் அந்த வரத்துடன் பிறக்கிறான். அவன் பிறக்கும்போதே அது அவனுடன் சேர்ந்து பிறக்கிறது. அவன் பிறப்பதற்கு முன்பும் அந்த வரம் அவனுடன் இருக்கிறது. 62 ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கிப் பாருங்கள், யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பே, ஏசாயா அவனைக் குறித்து, "வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாயிருக்கும்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். 63 எரேமியாவைப் பாருங்கள். அவன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே, அவன் கர்ப்பத்திலிருந்தபோதே தேவன், "நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” என்றார். புரிகிறதா? “வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்பதலின்றி அளிக்கப்படுகின்றன்.” 64 அங்கே கிரியை செய்வதற்கு ஏதாவதொன்று இருக்கும்போது மாத்திரமே, உங்களால் கிரியை செய்ய முடியும். உதாரணமாக, கிரியை செய்ய உனக்கு வலது கை இருந்தால், அது தேவனுடைய ராஜ்யத்திற்கென கிரியை செய்யட்டும். காண்பதற்கு உனக்கு கண்கள் இருந்தால், நீ சரியான காரியங்களைப் பார். பேசுவதற்கு உனக்கு உதடுகளும் சப்தமும் இருந்தால், நீ சரியான காரியங்களைப் பேசு, எதுவானாலும் சரியான காரியங்களையே செய். உனக்குள்ள எல்லாவற்றையும் தேவனுக்கென்று அவருடைய மகிமைக்காக மாற்றியமை. 65 இப்பொழுது இந்த முன்னறிவிப்பு, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை, அவை நடப்பதற்கு முன்பே, முன்கூட்டி அறிவிக்கிறது என்று நாம் கண்டறிகிறோம். அது வினோதமாகத் தென்பட்டாலும், சர்வ வல்லமையுள்ள தேவன் குழந்தை இயேசுவின் நலனைக் கருதி, என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு சொப்பனத்தின்மூலம் முன்னுரைத்து வெளிப்படுத்தினார். தேவன் தமது சொந்த குமாரனைக் குறித்து, இந்த இரண்டாம் வழியாகிய சொப்பனத்தின் மூலம், யோசேப்புக்கு வெளிப்படுத்தினார். அவரே அதைச் செய்தார் என்று வேதம் உரைத்துள்ளது. ஆம் ஐயா. இப்பொழுது யோசேப்பு ஒரு நல்ல மனிதனாயிருந்தான். அவன் தாவீதின் குமாரனாயிருந்தான். அவன் மரியாளுக்கு நியமிக்கப்பட்டிருந்தான். 66 இப்பொழுது நாம் தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு முன்பு, நான் இதைக் கூற விரும்புகிறேன். கிழக்கத்திய நாடுகளில் "நியமிக்கப்படுதல்”... நிச்சயதார்த்தம்... என்பது திருமணத்திற்கு ஒத்ததாய் உள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்டவுடனே, மணம் புரிந்து கொண்டதாக கருதப்படுகின்றனர். அவர்களிருவரும் இந்த பரிசுத்தமான பொருத்தனையை செய்து கொள்ளும்போது, உபாகமம் 22:23-ஐ படித்துப் பாருங்கள், ஸ்திரீயும் மனிதனும் விவாகம் செய்து கொள்ள சம்மதிக்கும்போது (அதன் பின்பு சில மாதங்கள் கழித்தே அவர்கள் விவாக பொருத்தனை செய்கின்றனர் என்பதை நீங்கள் கண்டறியலாம்.) அவர்கள் நியமிக்கப்பட்ட போது ஏறெடுத்த பொருத்தனையை மீறினாலும் கூட, அவர்கள் விபச்சாரஞ் செய்த குற்றத்துக்கு ஆளாவார்கள். அது உண்மை . அவர்கள் நியமிக்கப்படும்போது, அது விவாகம் புரிந்து கொண்டதற்கு சமானம். ஆனால் அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ அப்பொழுது பிரமாணம் அவர்களுக்கு உரிமையளிப்பதில்லை. ஆனால் தேவனுடைய சமூகத்தில், அவர்களிருவரும் வாக்கு கொடுக்கும்போது, அவர்களுடைய வார்த்தைகள் தேவனுடைய ராஜ்யத்தில் முத்தரிக்கப்பட்டு விடுகின்றன. அதை மீறினால் அவர்கள் விபச்சாரஞ் செய்தவர்களாகி விடுவார்கள். யோசேப்பு மரியாளுக்கு "நியமிக்கப்பட்டிருந்தான்.” போதகர் சகோதரர்களே, அதை நீங்கள் சரியாக படித்தால் இன்றைக்கு விவாகமும்விவாகரத்தும் என்பதைக் குறித்து மக்களிடையே காணப்படும் மிக-மிக கடினமான, வித்தியாசமான பிரச்சனைகள் தெளிவாகும். இப்பொழுது அவளுடைய கணவனான யோசேப்பை கவனியுங்கள். அவன் நீதிமான், பாருங்கள், அதை மீற முடியாது என்பதை நாம் காண்கிறோம். 67 அவள் அவனிடம் சொல்லியிருக்க வேண்டும். இந்த அழகான வாலிப யூதக் கன்னிப்பெண்... நான் அறிந்த வரையிலும் இங்குள்ள நாம் அனைவரும் வயது வந்தவர்கள். அவள் தாயாகும் நியலையையடைந்தாள். யோசேப்பு அவளுடன் சென்றபோது இதை கவனித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அவன் அவளுக்கு நியமிக்கப்பட்ட பின்பு, அவள் தாயாகப் போவதை அறிந்து கொண்டான். அவன் நீதிமானாயிருந்தான். அவன் அவ்வாறு இருந்தான் என்றே வேதம் கூறுகின்றது. அவள் களங்கமற்றவள் என்று அவனிடம் சொல்லியிருப்பாள். அந்த அழகான பெண் யோசேப்பிடம் இவ்வாறு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, அதாவது, “என் பிரியமுள்ள நண்பரே, என் அருமை கணவர் யோசேப்பே, இந்த விஷயத்தில் நான் களங்கமற்றவள்” என்றாள். அவள் அவனிடம், பிரதான தூதனாகிய காபிரியேல் அவனைச் சந்தித்ததைக் குறித்தும், என்ன சம்பவிக்கப் போகின்றது என்று அவன் கூறிய இந்த மகத்தான அடையாளங்களைக் குறித்தும் சொல்லியிருப்பாள். 68 அதன் பின்னர் அவள் இந்த சந்திப்பிற்குப் பிறகு, தூதனுடைய செய்தியினால் அவள் மிகவும் களிகூர்ந்து, அவள் பிறந்த ஊராகிய அந்த எளிய நாசரேத்தை விட்டு, மலைப்பாங்கான யூதேயாவுக்குப் புறப்பட்டு சென்றாள். 69 அவள் அங்கு சென்றபோது, மலடி என்றழைக்கப்பட்ட அவளுடைய ஒன்று விட்ட சகோதரியாகிய எலிசபெத்தும் தாய்மை பருவத்தை அடைந்திருந்தாள் (ஏற்கனவே ஆறு மாதங்கள்). 70 அவளுடைய கணவன் சகரியா தேவாலயத்தில் ஒரு ஆசாரியனாக இருந்தான். ஒரு நாள் அவன் வெளியிலேயிருந்த ஜனங்கள் செய்து கொண்டிருந்த ஜெபத்துக்காக காணிக்கையை அசைவாட்டிக் கொண்டிருந்த போது, சரியாகக் கூறினால் அது தூபங்காட்டுதல்... கர்த்தருடைய தூதனாகிய காபிரியேல் தோன்றினான். அவன் இதற்கு முன்பு காணப்படவில்லை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இயற்கைக்கு மேம்பட்ட எதையுமே ஜனங்கள் காணவில்லை ஆனால் பீடத்தின் வலது பாகத்தில் இந்த தூதன் வந்து நின்று, அவனுடைய மனைவி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், அவனுக்கு யோவான் என்று அவன் பெயரிடுவான் என்றும் சொன்னான். அந்த வரலாறை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 71 ஆறு மாதங்கள் கழித்து காபிரியேல் நாசரேத்தில் மரியாளை சந்தித்து, அவளுடைய ஒன்று விட்ட சகோதரியாகிய எலிசபெத்துக்கு நடந்ததைக் கூறினான். உடனே மரியாள், அந்த பெரிய இரகசியத்தை தன் இருதயத்தில் வைத்துக் கொண்டு, தன் ஒன்று விட்ட சகோதரியைக் காண மலைகளுக்கு விரைந்தாள். 72 எலிசபெத் தான் இருந்த நிலையில் மனிதர்களுக்கு முன்னால் வர விரும்பாமல், ஆறு மாதங்களாக தன்னை மறைத்துக் கொண்டாள். நான் வேதத்தை புரிந்து கொண்டவிதமாக, அது வரைக்கும் அந்த குழந்தைக்கு ஜீவன் இல்லை என்று அவள் கவலை கொண்டிருந்தாள். கர்ப்பமுற்று மூன்று, நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தை வயிற்றினுள் அசையாமலிருப்பதென்பது அசாதாரணமான காரியம். ஆனால் ஆறு மாதங்களாகியும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அசையவேயில்லை. ஆனால் எலிசபெத்தும் மரியாளும் ஒருவருக்கொருவர் சந்தித்த போது, ஒன்றுவிட்ட சகோதரிகள் என்னும் முறையில் அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, ஒருவர் மற்றவரை கண்டதில் மகிழ்ச்சி கொண்டனர் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் என்ன கூறினார்கள் என்று சிந்தித்து பார்ப்போம். எலிசபெத் மரியாளிடம், அன்பே , நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. மரியாள், “நீ கர்ப்பவதியாயிருப்பதை நான் அறிவேன்” என்றாள். 73 அதற்கு அவள், "ஆம், ஆறு மாதங்களாகியும் குழந்தை வயிற்றில் அசையவிலை. அது ஒரு விதமாக என்னைத் தொல்லைப்படுத்துகிறது,” என்றாள். 74 நான் உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும். அதை என்னால் இனியும் மறைத்து வைக்க முடியாது.” 75 உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் தேவனுடன் தொடர்பு கொள்ளும் போது, அதைக் குறித்து நீங்கள் அமைதியாயிருக்க முடியாது. நீங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருந்தால், அதைக் குறித்து நீங்கள் ஏதாவதொன்றை மற்றவர்களிடம் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அதை எங்காவது வெளிப்படையாக அறிவித்தே ஆக வேண்டும். 76 "உனக்குத் தெரியுமா, நான் உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும். நானும் கூட ஒரு குழந்தையை பிறப்பிக்கப் போகிறேன்” என்று மரியாள் எலிசபெத்திடம் கூறுகிறதை என்னால் கேட்க முடிகிறது. 77 எலிசபெத், , நான் நினைக்கிறேன். அப்படியானால் நீயும் யோசேப்பும் விவாகம் செய்து கொண்டபோது எங்களை ஏன் அழைக்கவில்லை? நீ நியமிக்கப்பட்டிருந்தாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் விவாகத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?” என்று கேட்டிருப்பாள். எங்களுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை ” “உனக்கு குழந்தை பிறக்கப் போகிறதா? "ஆமாம்” “மரியாளே, எனக்கு-எனக்கு-எனக்கு ஒன்றுமே புரியவில்லை .” 78 உனக்குத் தெரியுமா? கர்த்தருடைய தூதனாகிய காபிரியேல் என் முன் தோன்றினான். நீ கர்ப்பவதியானதைக் குறித்து அவன்தான் என்னிடம் கூறினான். என்னிடம் கூறினது அவன் தான். பரிசுத்த ஆவி என்மேல் நிழலிடுவார் என்றும், என்னிடத்தில் பரிசுத்தமானது பிறக்கும் என்றும், அவர் தேவனுடைய குமாரன் எனப்படுவார் என்றும், அவருக்கு நான் இயேசு என்று பெயரிட வேண்டும் என்றும், ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றும் கூறினான்.” 79 அந்த அற்புதமான நாமம் முதன் முறையாக மனித உதடுகளின் மூலம் உச்சரிக்கப்பட்டபோது, தன் தாயின் கர்ப்பத்தில் மரித்துப் போயிருந்த சிறு குழந்தை யோவான் களிப்பால் துள்ளி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான், தாயின் கர்ப்பத்தில் மரித்தவன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உச்சரிப்பதனால் உண்டாகும் வல்லமை தன் தாயின் கர்ப்பதில் மரித்துப் போயிருந்த ஒரு குழந்தையை உயிர்பெறச் செய்யுமானால், அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய ஊழியக்காரர் என்று உரிமை கோரும் சபைக்கு அது என்ன செய்ய வேண்டும்? எலிசபெத் திடுக்கிட்டு, அவள் மரியாளைப் பார்த்து, "என் ஆண்டவருடைய தாயார், எப்போது வந்தாள், என் ஆண்டவருடைய தாயார் நீ வாழ்த்தின சத்தம் என் காதுகளில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய் துள்ளிற்று” என்றாள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், யோவான் தன் தாயின் கர்ப்பதிலேயே பரிசுத்த ஆவியால் நிறைந்தவனாய் பிறந்தான். அது எப்படிப்பட்ட குழந்தையாக இருந்திருக்க வேண்டும்! இதை அவள் யோசேப்பிடம் அப்படியே கூறினாள் என்பதில் சந்தேகமில்லை . 80 இப்பொழுது பாருங்கள், யோசேப்பு நீதிமானாயிருந்த காரணத்தால், இவ்வாறு நினைத்தான்: "அவள் விபச்சாரத்தில் பிடிபட்டால் அவளுக்கு முதலாவதாக நேரிடப் போவது, அவள் கல்லெறியப்படுவாள். அவள்... முடியாது.” 81 அவர்கள் அவ்வாறு வாழ முடியாது. வேதம், "நகரத்தில் ஒரு கன்னிகை நியமிக்கப்பட்டிருந்து, அவள் ஒரு மனிதனால் கற்பழிக்கப்படும் போது, அவள் கூச்சலிடாமலிருந்தால், அவர்கள் இருவருமே ஒன்றாக கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். ஆனால் அவள் நகரத்தில் வயல்வெளியில் இருக்கும்போது, அவள் கூச்சலிடுவதைக் கேட்க யாரும் இல்லாவிட்டால், அவளை கற்பழித்தவன் கொல்லப்பட வேண்டும்.அவள் உயிர் வாழ வேண்டும்” என்று கூறுகிறது. இதைக் குறித்த தண்டனை உபாகமம் 22-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதை நீங்கள் வாசிக்கும்படி சற்று முன்பு உங்களைக் கேட்டுக் கொண்டேன். 82 இப்பொழுது கவனியுங்கள். அவள் விவாகமாகாமல் தாய்மை பருவத்தை அடைந்ததாக நாம் காண்கிறோம். எனவே பரியாசக்காரரிடமிருந்து, நிந்திக்கிறவர்களிடத்திலிருந்தும் தன்னை மறைத்துக் கொள்ள மரியாள் யோசேப்பை ஒரு கேடயமாக உபயோகிக்க முயல்வதுபோல் அவனுக்குத் தோன்றினது. பாருங்கள். யோசேப்பு அவளுடைய கேடயமாயிருக்க வேண்டும்; அவளை எப்படியாயினும் விவாகம் செய்து அவளுக்கு கேடயமாயிருக்க வேண்டுமேயன்றி, குடும்ப உறவில் அவளுக்கு கணவனாக அல்ல, ஆனால்... அவன் அவளுக்கு ஒரு-ஒரு கேடயமாக இருக்க வேண்டும். 83 அவன் அவளை நம்ப வேண்டும் என்று விரும்பினான். நான் - நான் அதை உண்மையாகவே விசுவாசிக்கிறேன். அவன் அவளை நம்ப வேண்டுமென்று விரும்பினான், ஆனால் அவள் கூறின வரலாறு வழக்கத்திற்கு மாறாக இருந்தபடியால், அந்த விசுவாசிக்கு அதை விசுவாசிப்பது கடினமாயிருந்தது. 84 மனிதரே, நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. இன்று பூமியின் மேல், சபையில் காணப்படும் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் குறித்த வரலாறு ஸ்தாபனங்களுக்கும், ஸ்தாபன சிந்தைக்கும் வழக்கத்திற்கு மாறாக உள்ளது. அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினாலும், அது அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாகவும், மூடபக்தி வைராக்கியமுள்ளதாகவும் காணப்படுகின்றது. ஆனால் அது சத்தியம்! இவ்விதமாக அது இருக்கும் என்று வேதம் கூறியுள்ளது, இதோ அது நிறைவேறுகின்றது. சில கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள அநேக மனிதர் இதை உண்மையாகவே விசுவாசிக்க விரும்புகின்றனர். ஆனால் இது வழக்கத்திற்கு மாறாக உள்ளபடியால் அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அவனுக்கு அவனுக்கு அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யோசேப்பைப் போன்று அவர்களும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர். 85 வேதம், “அவன் இப்படிப்பட்ட காரியங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்” என்று கூறியுள்ளது, பாருங்கள். அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்தான், தன் சொந்த பெயர் கறைபடுவதை அவன் விரும்பவில்லை. அவள் அந்நிலையில் இருந்தால், அதே சமயத்தில் அவன் அவளை விவாகம் செய்து கொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தான்; ஏனெனில் அவள் வேறொருவரின் மூலம் தாய்மை பருவம் அடைந்து விட்டாள். அவன், “ஆயினும் அந்த களங்கமற்ற சிறு பெண்ணின் வாழ்க்கை லீலிப் புஷ்பத்தை போல் தூய்மையாய் இருந்து வந்துள்ளது, அவளை நான் நம்ப விரும்புகிறேன், ஆனால் என்னால் என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை ” என்றான். 86 அவன் இப்படிப்பட்ட காரியங்களைச் சிந்தித்து, அவளை இரகசியமாக தள்ளிவிட மனதாயிருந்தான். அவன், "நான் இதைக் குறித்து எவ்வித தொந்தரவும் உண்டாக்கமாட்டேன்” என்றான். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவன் இன்னும் விவாகப் பொருத்தனை செய்யவில்லை, ஆனால் அவன் நியமிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் அவளை இரகசியமாக தள்ளிவிட்டான. "அவளை இரகசியமாக தள்ளிவிட வேண்டுமென்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில்” பாருங்கள், அவனுடைய அறிவுக்கு எட்டின வரைக்கும், பாருங்கள், அவன், ஒரு நீதிமானாய், ஒரு நல்ல மனிதனாய் இருந்தான். 87 சகோதரனே, சகோதரியே, நான் இதைக் கூறட்டும். நீங்கள் நீதிமான்களாயும், உங்கள் இருதயத்தில் உத்தமமாயும் இருப்பீர்களானால் இந்த காரியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த தேவன் கடமைபட்டிருக்கிறார். 88 அவளுடைய கணவனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்தபடியால், இப்படிப்பட்ட காரியங்களை குறித்து ஆழ்ந்து சிந்தித்தான். அது மிகவும் அசாதாரணமான ஒன்று. நான் கூறின விதமாகவே, அவனால் அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை ." இவை எப்படியிருக்க முடியும்?” ஆனால் அவன் உட்கார்ந்து, அதைக் குறித்து ஜெபம் செய்து, வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, “இவை எப்படியிருக்க முடியும்?” என்று சிந்தித்தான் என்பதில் சந்தேகமில்லை. அவன் இவ்வாறு ஆராய்ந்து கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் அவனுக்கு சொப்பனத்தில் தரிசனமானான். அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல. அந்த நாட்களில் பூமியில் ஒரு தீர்க்கதரிசியும் இல்லை . "கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதுடன் அவனிடம் வருவதற்கு யாருமே கிடையாது. எனவே கர்த்தர் இரண்டாந்தரமான முறையைக் கையாண்டார். தம் சொந்த குமாரனின் நலனுக்காக தேவன் ஒரு சொப்பனத்தின் மூலம் ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தி, அவரை எகிப்துக்கு கொண்டு சென்று, மறுபடியும் அங்கிருந்து கொண்டு வந்து, சாஸ்திரிகளிடமிருந்து அவரை மறைத்தார், இல்லை , சாஸ்திரிகள் வேறு வழியாகச் சென்றனர். தேசத்தில் தீர்க்கதரிசி இல்லாததனால், தேவன் இரண்டாம் முறையாகிய சொப்பனத்தை தெரிந்து கொண்டார். ஞானதிருஷ்டிக்காரனாக இருக்க பிறக்காத மனிதர் இருந்தனர். ஆனால் அவர்கள் நல்லவர்கள். அவர்கள் இவ்வாறு செய்தபோது, தேவன் அவர்களுடைய உள் நினைவில் அவர்களை சந்தித்து தம்மை வெளிப்படுத்தினார். 89 உங்களை நீங்கள் சற்று தேவனுக்கு ஒப்புவிப்பீர்களானால், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்தக் கூடிய அநேக வழிகளை உடையவராயிருக்கிறார். புரிகிறதா? நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இல்லாமலிருக்கலாம், நீங்கள் ஒரு ஞாயிறு பள்ளி உபாத்தியாயினியாக இல்லாமலிருக்கலாம், நீங்கள் ஒரு போதகராக இல்லாமலிருக்கலாம். ஆனால் தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு அநேக வழிகள் உண்டு, நீங்கள் பாருங்கள். அது சொப்பனமானாலும், வேறெந்த வழியிலானாலும், நீங்கள் மாத்திரம் யோசேப்பைப் போல் உங்களை ஒப்புவிப்பீர்களானால் நலமாயிருக்கும். 90 “ஓ, மகத்தான யேகோவாவே, தேவனே, நான்-நான் தாவீதின் சந்ததியில் பிறந்தவன். நான் நான் ஒரு நீதிமான் என்று நம்புகிறேன். நீர் கூறியுள்ளவை சத்தியம் என்று நான் நம்புகிறேன். நான் பெற்றுள்ள இந்த அருமையான, இருதயத்துக்கு இனியவளுக்கு, நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். அவளை நான் தள்ளிவிடப் போகிறேன். இல்லையென்றால் நான் நான் விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாவேன். அவள் தாயாகப் போகின்றாள். அவளை மனைவியாக நான் அறியவில்லை. கர்த்தாவே, இந்தக் காரியங்கள் எல்லாம் என்ன?” என்று யோசேப்பு சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை . 91 பாருங்கள், அவன் ஒரு தீர்க்கதரியல்ல, எனவே அவரால் அந்த முறையில் அவனிடத்தில் பேச முடியாது, எனவே அவர்அவர் அவனை உறங்கச் செய்து, சொப்பனத்தில் கர்தருடைய தூதனை அவனிடம் அனுப்பினார். ஆமென். கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனிடம் வந்து, அவனைத் தொட்டு, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். அங்குதான் காரியம். மேலும் "அவளுக்குள் இருப்பது, ஒரு மனிதனால் உற்பத்தியானதல்ல, பரிசுத்த ஆவியானவரே இதைச் செய்துள்ளார். அந்த ஸ்திரீ உன்னிடம் உண்மையைத் தான் கூறினாள். யோசேப்பே, வழக்கத்திற்கு மாறாத நிகழ்ந்த இச்சம்பவம் உன்னை கலங்கச் செய்துவிட்டது. அது பரிசுத்த ஆவியால் உண்டானது” என்றான். 92 அதே தேவன் இன்றிரவும் ஜீவிக்கிறார்! நீங்கள் இன்னும் உள் நினைவைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு... கிறிஸ்தவர்களே, நீங்கள் காணும் காரியம் வழக்கத்திற்கு மாறானது என்று உங்களுக்குத் தென்பட்டாலும், அது தேவனுடைய வார்த்தையுடன் சரிவரப் பொருந்துமேயானால், அந்த வழக்கத்திற்கு மாறான காரியங்களை தேவன் அநேக வழிகளில் உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கக் கூடியவராயிருக்கிறார். 93 எனவே அவர் யோசேப்பிடம், “தாவீதின் குமாரனே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே” என்றார். அவள் ஏற்கெனவே அவனுடைய மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள். “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள். ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். 94 அப்பொழுது, தேவன் தமது தூதனை அனுப்பி அதை வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு அந்த வெளிப்பாடு சொப்பனத்தின மூலம் கிடைத்தது. அதில் இரகசியம் ஏதுமில்லை என்று அவன் அறிந்து கொண்டான். தூதன் ஒரு சொப்பனத்தில் அவனிடம் வந்தான். அவன் தன்னுடைய சொப்பனத்தில் தூதனைக் கண்டான். 95 ஒரு தீர்க்கதரிசி அல்லது ஞானதிருஷ்டிக்காரன் அதற்காக உறங்க வேண்டிய அவசியமில்லை. அவன் விழித்துக் கொண்டே தூதன் நிற்பதைக் காண்கிறான். ஆனால் மற்ற மனிதனோ உறங்கச் சென்று, அதன்பின்னரே அவன் தூதனைக் காண்கிறான். 96 தூதன், “யோசேப்பே, இது ஒரு புதிர் அல்ல. இதற்கு அர்த்தம் உரைக்க உனக்கு யாருமில்லை. எனவே நான் இதைக் குறித்து உனக்கு விளக்கிக் கூறப்போகிறேன். ஏனெனில் அதை விளக்கிக் கூறுவதற்கு யாருமே அங்கில்லை. உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். 97 அப்பொழுது யோசேப்பு உறக்கத்தினின்று எழுந்த போது, புதிதாய் பிறந்த விசுவாசத்தினால் அவனுடைய இருதயம் எவ்வளவாக நிறைந்திருக்கும்! அவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அந்த இரகசியத்தை அவன் விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினான், அவன் விசுவாசிக்க தைரியங் கொண்டான். அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அது ஒரு சொப்பனத்தில் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. புதிய விசுவாசம் அவனுடைய வாழ்க்கையில் முளைத்தெழும்பிற்று. என்னே! அவன் தேவனில் விசுவாசங்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய மனைவியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தான். தேவன் பேரில் விசுவாசமும், அவன் நேசித்த தன் மனைவியின் பேரில் அன்பும் கொண்டிருந்தான். அதன் பின்பு அவனுக்கு அதைக் குறித்து வேறு கேள்வியே இல்லை. அது கர்த்தருடைய தூதன் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் மனதில் எழுந்திருந்த கேள்விக்கு தேவன் சரியான விடையை அவனுக்கு அளித்துவிட்டார் என்பதையும் அவன் அறிந்து கொண்டான். எனவே எல்லா கேள்விகளும் போய்விட்டன. 98 தேவன் தாம் விரும்பும் எந்த வழியிலாகிலும், உங்கள் மனதில் உள்ள கேள்விக்கு, அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவாரானால், அதன்பிறகு உங்களுக்கு எவ்வித சந்தேகமும், எவ்விதக் கேள்வியும் இருக்காது. அது ஒரு வெளிப்பாடாயிருக்கிறது. 99 வேதத்தில் நீங்கள் ஏதாவதொன்றைக் காணும்போது, நீங்களோ, “அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே என்று நான் எண்ணுகிறேன். இயேசு கடந்து போன நாட்களில் அதை செய்தார் என்று நான் நினைக்கிறேன்” என்கிறீர்கள். 100 ஆனால் வேதமோ, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அதே இயேசு” என்கிறது. அதுவே உங்கள் கேள்வியாயிருந்து, அதைக் குறித்து நீங்கள் யோசனைப் பண்ணி, அது நிகழ்வதைக் கண்டு வியப்புற்றால், நீங்கள் மாத்திரம் உத்தமமாயிருந்தால், கர்த்தருடைய தூதன் எவ்வகையிலாகிலும் அதை உங்களுக்கு வெளிப்படுத்தி தருவார். அதன் பிறகு அது கேள்வியாக அமையாமல், சத்தியமாக இருக்கும். அப்பொழுது நீங்கள், , நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்று கூச்சலிட்டு சத்தமிடலாம். 101 அது நிகழ்ந்த போது யோசேப்பின் மகிழ்ச்சி எவ்வாறிருந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. எல்லா... இரகசியம் அனைத்தும் முடிந்துவிட்டது. அது முடிந்து விட்டபோது, அவன் களிகூர்ந்தான், ஏனென்றால் அவன் மிக்க மகிழ்ச்சியாயிருந்தான். அவன் உடனே அவனை விவாகம் செய்து கொண்டான் என்று நாம் காண்கிறோம். ஓ, அவனுக்கு அப்பொழுது வேறு கேள்வியே இல்லை. அவன் மரியாளை தன் மனைவியாக சேர்த்துக் கொண்டு குழந்தை பிறக்குமளவும் அவளை மனைவியாக அறியவில்லை. அதைக் குறித்து மகிழ்ச்சி கொண்டான்! மரியாளின் கேடயமாக இருக்க அவன் மகிழ்ச்சி கொண்டான். அவளுடைய நிந்தையை சுமக்க அவன் மகிழ்ச்சி கொண்டான். 102 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பது ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப்படுமானால், எத்தனை கோட்பாடுகள் அவனை அதனின்று வழி திருப்ப முயன்றாலும் கவலையில்லை, நீங்கள் கேடயமாயிருக்க மகிழ்ச்சி கொள்வீர்கள். நீங்கள் கேடயமாயிருக்க மகிழ்ச்சி கொள்வீர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அந்த அக்கினியாஸ்திரங்களை அவித்துப்போட உங்களுக்கு ஒரு பெரிய கேடயம் உள்ளது. 103 அங்கே வெளியிலிருப்பவர்களுக்கு நான் பேசுவது அதிக சத்தமாயில்லை என்று நான் நம்புகிறேன். அவர்களும் கூட அதைக் கேட்கட்டும், அவர்கள் கேட்க வேண்டும். கவனியுங்கள். ஆம் ஐயா. 104 நீங்கள் கேடயமாயிருக்க மகிழ்ச்சி கொள்வீர்கள். நீங்கள் ஒரு மிதியடியாயிருக்கிறீர்கள், நீங்கள் என்னவாயிருக்க விரும்பினாலும் பரவாயில்லை. அது கர்த்தரால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. கர்த்தர் தமது வார்த்தையைக் கொண்டு அது உண்மையென்று உங்களுக்கு காண்பித்து விட்டார்; அதன் பிறகு, அது மறுபடியும் ஜீவிக்க, அதை உங்களுக்கு உறுதிப்படுத்திவிட்டார். நீங்கள், “அது உண்மை ! எதுவுமே என்னை ... மாற்ற முடியாது” என்பீர்கள். 105 தேவனை முகமுகமாய் சந்திக்காமல் எந்த மனிதனுக்குமே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உரிமையில்லை, அது உண்மை . பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல், எந்த மனிதனும் பிரசங்க பீடத்தில் நிற்கக் கூடாது. இயேசு சீஷர்களிடம், "இப்பொழுது உபதேசம் பண்ணாதிருங்கள். உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரையில் எருசலேமிலேயே தங்கியிருங்கள்” என்று கட்டளையிட்டார். பரிசுத்த ஆவி வந்த போது என்ன செய்ததென்று கவனித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவி என்பது தேவன். 106 பரிசுத்த ஆவி இயேசு கிறிஸ்துவின் பிதாவாயிருக்கிறார். மத்தேயு 2-ம் அதிகாரம் 20-ம் வசனம், "அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவள் பரிசுத்த ஆவியினாலே கர்பவதியானாள்” என்று உரைக்கிறது. பரிசுத்த ஆவி இயேசு கிறிஸ்துவின் பிதாவாயிருக்கிறார். 107 பரிசுத்த ஆவி வந்து வார்த்தையை வெளிப்படுத்தி, அதை தத்ரூபமாக ஜீவிக்கச் செய்யும்போது, அப்பொழுது அது உங்களுக்கு ஒரு வெளிப்படாகிவிடுகிறது, அது திறந்து காட்டப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். அது இந்த மணி நேரத்துக்காக வாக்களிக்கப்பட்டுள்ளது. 108 ஏசாயாவினுடைய தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டதை யோசேப்பு கண்டான். ஏசாயா 9-ம் அதிகாரமோ, "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். 'நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா.' அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை” என்று உரைக்கிறது. அது யார் என்பதை அவன் அறிந்து கொண்டான், ஏனென்றால் கர்த்தருடைய தூதன், அவனிடத்தில் இதைக் கூறி, அது "அவனிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்று சொன்னபோது, அவன்-அவன் முழுக்காரியத்தையும் புரிந்து கொண்டான். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள்.” இப்பொழுது, அது ஒரு பரம ரகசியமாகவும், தேவன் முழு உலகிற்கு அளித்த மேம்பட்ட அடையாளமாகவும் திகழ்ந்தது, அது அவருடைய குமாரன் என்னும் ஒரு மேம்பட்ட அடையாளம். 109 இப்பொழுது, நாம் தொடர்ந்து இதைப் பார்க்கும்போது, கவனியுங்கள். நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளமாட்டேன், அவ்வாறு எடுத்துக் கொள்ளாமலிருக்க முயற்சிக்கிறேன். நாம் தொடர்ந்து இதைப் பார்க்கும்போது, நாம் கண்டறிகிறோம், இயேசு ... இப்பொழுது நான் நினைக்கிறேன். இங்குள்ள சிறு பிள்ளைகள் இதைப் புரிந்து கொள்ளமாட்டார்கள், ஆனால் நான் இங்குள்ள பெரியவர்களுக்கு ஒரு காரியத்தைக் கூற வேண்டும். அவர்கள் புரிந்து கொள்வார்கள்.... 110 கிறிஸ்து இயேசு மரியாளின் வயிற்றில் உருவாகிக் கொண்டிருந்தபோது, அப்பொழுதுதான் உபத்திரவம் தொடங்கினது. அது உண்மை. அது உண்மை. அப்பொழுதே அவளுக்கு உபத்திரவம் துவங்கினது. 111 அதேக் காரியம் உங்களிலும் உள்ளது. கலாத்தியர் 1, இல்லை கலாத்தியர் 4:19, “கிறிஸ்து (மகிமையின் நம்பிக்கையாக) உருவாகும்போது, உங்களில் உருவாகும்போது,” என்று உரைக்கிறது. கிறிஸ்து உங்களில் உருவாகும்போது, நீங்கள் மரித்துக் கொண்டிருக்கும்போது, கிறிஸ்து ஜீவனாய் வந்துகொண்டிருக்கிறார். அப்பொழுது உபத்திரவம் துவங்குவதைக் கவனியுங்கள், அப்பொழுது ஒவ்வொரு பக்கத்திலும் தொல்லை உண்டாவதை கவனியுங்கள். நிச்சயமாகவே, கிறிஸ்து உங்களில் உருவாகிக் கொண்டிருக்கும்போது, பிசாசு ஒரு வெறித்தனத்தோடு செயல்படுவதைக் கவனியுங்கள். 112 கிறிஸ்து மரியாளில் உருவாகிக் கொண்டிருந்தபோது, “ஜனங்களாகிய நீங்கள் எல்லோரும்” என்னும் ராஜாவின் கட்டளை உடனே பிறந்தது. அவளில்... கிறிஸ்து அவளில் முழு குழந்தையாக வளர்ந்து, அவள் பிரசவிக்க ஆயத்தப்பட்டபோது, அப்பொழுது பெரிய உபத்திரவம் நேர்ந்தது. 113 இப்பொழுது நீண்ட காலமாக குழந்தை கர்ப்பத்தில் உருவாகிக்கொண்டு வந்தது. ஆனால் இந்த கடைசி நாட்களில் அந்த முழுமை, தேவத்துவத்தின் பரிபூரணம், கிறிஸ்துவின் பரிபூரணம் அவருடைய ஜனங்களின் மத்தியில் வெளிப்படும்போது, இது வருகிறது. அவர் அவ்வண்ணமாய்க் கூறினார், அவர் அதை தம்முடைய வார்த்தையில் வாக்களித்தார். நீங்கள் பாருங்கள், அந்த பரிபூரணம் வரும்போது, அவர் வாக்களித்துள்ள வழக்கத்திற்கு மாறான காரியங்கள் சம்பவிக்கத் துவங்குகின்றன. அந்தக் காரணத்தினால்தான் நம்முடைய மகத்தான சமுதாய வாழ்க்கைகளும், மற்றவைகளும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை . அது அவர்களுக்கு பைத்தியமாய் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் உலக சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றனர், பாருங்கள். சபையானது தன்னுடைய கால்களில் எழுந்து நின்று, இயற்கைக்கு மேம்பட்ட கிரியையை செய்யத் துவங்கும்போது, அவர்கள் யாவரும் ஒரு குழுவுக்குள் சென்று விட்டனர், இப்பொழுது அவர்கள் இதை நிறுத்த முயற்சிக்கப்போகிறார்கள். அது அப்பொழுது இருந்தது போலவே சரியாக இன்றும் உள்ளது. 114 பீனிக்ஸில் நான் கடந்த சனிக்கிழமை கூறியதுபோல, ஜனங்கள் வரமுடியாதபடிக்கு பெலிஸ்தியர் பெத்லகேமில் தாணயத்தை நிறுத்தியிருந்தனர், உலக சபைகள் ஆலோசனை சங்கம் மூலம் ஜனங்கள் வந்தாலொழிய அவர்களால் வரமுடியாது. அவர்கள் தேங்கி நிற்கும் தொட்டிகளுக்கு அவர்களைக் கொண்டு செல்வார்கள், பெதலகேமின் புதிய தண்ணீர் ஊற்றண்டை அல்ல, உண்மையிலேயே அங்கு அல்ல. இப்பொழுது நாம் கவனிப்போம். 115 கிறிஸ்து உருவாகிக் கொண்டிருந்தபோது, ராஜா தன்னுடைய கட்டளையைப் பிறப்பித்தான். இப்பொழுது நாம் அவைகளை எடுத்துக்கொண்டு சற்று நேரம் பார்ப்போம், நாம் அவைகளை கவனித்துப் பார்ப்போம், நாம் முடிப்பதற்கு சற்று முன் அவைகளை ஆராய்ந்து பார்ப்போம். யோசேப்பு, “மரியாளே, அன்பே, அந்த கொடிய ராஜா!” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. 116 ஆனால் அவள், “அன்பே கேளுங்கள். பரிசுத்த ஆவி என்னிடத்தில், 'அவருடைய நாமம், “இயேசு” என்றழைக்கப்படும், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்' என்று கூறினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, யோசேப்பே, அன்பே, என்ன நேர்ந்தாலும் கவலைப்படாமல், ராஜா என்னக் கூறினாலும் என்னால் பயணிக்க முடியும். என்னால் அந்த சிறு கோவேறு கழுதையின் மேல் உட்கார்ந்து பயணிக்க முடியும். பாறைகள் நிறைந்த மலைகளைக் கடந்து அநேக மைல்கள் செல்வதாயிருக்கும். நமக்கு ஒரு சிறு உதவி தேவைப்பட்டால், அநேகர் பிரயாணத்தில் இருப்பர், ஏனென்றால் நம்முடைய குடும்பம் மாத்திரம் பிரயாணம் செய்யவில்லை. மற்றவர்களும் நாம் படுகின்ற அதே துன்பத்தை அனுபவித்துக் கொண்டு, அங்கே அவர்களும் வழியில் சென்று கொண்டிருப்பர். மற்ற கூட்டத்தாரோடு நாமும் மலையின் மேலேறி பெத்லகேமுக்கு சென்று விடலாம்” என்று கூறியிருப்பாள். ஏனென்றால் அவர்கள் நாசரேத்திலிருந்து மலையைக் கடந்து வந்தார்கள். 117 அவன் அந்த சிறு கழுதைக்கு அன்று சற்று அதிகமாக வைக்கோலும், புல்லரிசி உணவையும் கொடுத்திருக்க வேண்டும் என்பதை நாம் கண்டறிகிறோம், ஏனென்றால் அந்த சிறு பெண் கனமாயிருந்தாள். ஆகையால் அவன் அவளை கோவேறு கழுதையின் மேல் உட்கார வைத்து, ஒரு துருத்தி தண்ணீரும், சில சிறு இனிப்பு பண்டங்களையும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய கையில் தடியை எடுத்துக் கொண்டு சிறு கழுதையை நடத்திச் சென்றான். 118 அவர்கள் பிரயாணம் மேற்கொண்ட பாதையில், இந்த சிறு கோவேறு கழுதை தள்ளாடி விழச் செல்கிறது. , அந்த சிறு கழுதை எதை சுமந்து சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். அதனுடைய பாரத்தை, அது என்ன என்பதைப் பாருங்கள். அது கிறிஸ்துவை அவருடைய பிறப்பிடத்திற்கு சுமந்து சென்று கொண்டிருக்கிறது. இங்கே இந்த சிறு பெண் பிரசவவேதனையில் அமர்ந்து, அந்த சிறு கழுதையின் பிடரி முடியைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, அவள் செல்லும் பாதையில் அவனிடத்தில் பேசிக் கொண்டே சென்றாள். 119 அவர்கள் நாள் முழுவதும் பயணிப்பதை என்னால் காண முடிகிறது, அவர்கள் நிற்பார்கள், அவன் அவளை சற்று இளைப்பாறச் செய்வான், பின்னர் அவன், "அன்பே, நீ மிகவும் களைப்படைந்துவிட்டாயா?” என்று கேட்பான். 120 அதற்கு அவளோ, "இல்லை அன்பே, நான் நன்றாய் இருக்கிறேன், நான் நன்றாயிருக்கிறேன். இன்னும் சிறிது தூரம் நீ பிரயாணம் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்பாள்.அப்பொழுது அவன், “இல்லை அன்பே, நீ அங்கு அமர்ந்து கொள்” என்பான். 121 அவன் அவளை கழுதையின் மேலிருந்து இறக்கி, சற்று நேரம் இளைப்பாறச் செய்து, அவளுக்கு பருக தண்ணீரும், மற்றும் கொஞ்சம் தின்பண்டத்தையும் கொடுத்திருப்பான். அதன்பின்னர் மீண்டும் அவளை கழுதையின் மேல் ஏற்றியிருப்பான். 122 முடிவாக இருட்டாகத் துவங்குகிறது. பயணிகளால் அவர்களைக் காட்டிலும் வேகமாக பயணம் செய்ய முடிந்தது. அவர்கள் குதிரை பூட்டிய வாகனங்களில் அவளைக் கடந்து சென்றபோது, அதனால் எழுந்த தூசியை அவள் சுவாசிக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவள் இருந்த நிலைமையின் நிமித்தமாக அவள் உண்மையிலேயே மெதுவாக பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது, தாய்மைப் பருவத்திலுள்ள ஒருத்தியை அந்த நிலையில் அங்கு அனுப்புவதென்பது ஒரு கொடூரமான செயலாற்றே! ஆனால் இந்த நாடகத்தில், அவர்கள் மலையின் உச்சிக்கு வருவதை இப்பொழுது என்னால் அப்படியே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. பெத்லகேம்... ஒரு விதமான ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது. பெத்லகேமுக்கு மேற்கே உள்ள அந்த மலையிலிருந்துதான் அந்த சிறு நடைபாதை வருகிறது. 123 நான் கூறிக் கொண்டிருக்கும் இந்த நாடகத்தில், அவர்களை இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது. இருட்டாகி விடுகிறது. யோசேப்பு தன்னுடைய தடியினைக் கொண்டு பாதையைத் தடவிக்கொண்டே தன்னால் இயன்றவரை குறுக்குப் பாதையில் செல்ல முயல்கிறான். வாகனங்கள் செல்ல வேண்டியதாயிருந்த பாதை இந்த விதமாக வளைந்து செல்லுமானால், சீக்கிரம் செல்வதற்கும், தூசியிலிருந்து விடுபடவும் அவள் தன் மனைவியுடன் அநேகமாக குறுக்குப் பாதையில் செல்கிறான். நட்சத்திரங்களோ தோன்ற ஆரம்பித்துவிட்டன. 124 சற்று கழித்து அவன் மலையின் உச்சியை அடைகிறான். அங்கிருந்து அவர்கள் தாங்கள் பிறந்திருந்த பட்டிணமான பெத்லகேமை, பெத்லகேமில் அங்கே அந்த பட்டணத்தின் விளக்குகளைக் காண்கிறார்கள். அங்கே அநேகர் இருந்தனர், அங்கிருந்த இடங்களில் ஜன நெருக்கம் இருந்தது, ஜனங்களோ வெளிப்புறத்திலும், தரையிலும் வயல்வெளிகளிலும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருவேளை யோசேப்பினுடைய சிந்தையில் முதன் முறையாக, "நான் தங்குவதற்கு ஒரு இடத்தை கண்டறிய முடியாவிட்டால், நான் என்ன செய்வேன், ஏனென்றால் அந்தக் குழந்தை இன்றிரவு பிறக்கலாம். அவளுக்கோ இப்பொழுது இன்றிரவு அந்த குழந்தை பிறக்குமானால் என்னவாகும்?” என்ற கேள்வி எழுந்தது. 125 அவன் வியந்துகொண்டே அங்கு நின்றுகொண்டு பள்ளத்தாகினூடாக நோக்கிப் பார்த்தான், அவனுடைய கண்கள் பக்க வாட்டை நோக்கிப் பார்த்தன. அப்பொழுது அவன் ஒரு விநோதமான காட்சியைக் கண்டான். உங்களுக்கு தெரியுமா, இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் சம்பவிக்கும்போது, அது வழக்கமாகவே துன்ப நேரமாய் உள்ளது. அவன் அங்கு நோக்கிப் பார்த்தபோது, அவன் ஒரு நட்சத்திரத்தைக் கண்டான். அவன் அவ்வளவு பெரிய நட்சத்திரத்தை அதற்கு முன்பு கண்டதாக ஞாபகமேயில்லை. அதுவோ மிகவும் தாழ்வாகக் காணப்பட்டது. அது சரியாக பெத்லகேமின் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் மேல் நோக்கிப் பார்த்துவிட்டு, பின்னர் அவன் திரும்பி பார்த்து, பாறையின் மேல் அவன் மரியாளை உட்கார வைத்து சிறு நேரம் இளைப்பாறச் செய்துகொண்டிருந்தான். அவன் அவளைத் திரும்பிப் பார்த்து, "அன்பே, நீ அதை கவனித்தாயா...” என்றான். அவள் அங்கு அமர்ந்தவாறு பார்த்துகொண்டே புன்னகை புரிந்தபோது, அவளுடைய அழகான கருமை நிறக் கண்களில் அதன் பிரதிபலிப்பை அவனால் காண முடிந்தது. எனவே அவன், "அன்பே, அது விநோதமாயுள்ளதல்லவா?” என்று கேட்டான். 126 அவள், “யோசேப்பே, தேனே, சூரியன் அஸ்தமித்தது முதற்கொண்டே நான் அதை கவனித்து வந்துள்ளேன். நான் அந்த நட்சத்திரத்தைக் கவனித்துக் கொண்டே வருகிறேன். எப்படியோ அல்லது ஏதோ ஒரு காரியம் இன்றிரவு சம்பவிக்கப்போகிறதென்று உண்மையாகவே உணருகிறேன்” என்றாள். அது வழக்கமாகவே அந்த விதமாகவே இருந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள், எனவே உங்களுக்கு அந்த விநோதமான உணர்வு ஏற்படுகிறது. 127 அவளும் யோசேப்போடும் கூட அந்த நட்சத்திரத்தைக் கவனிக்கத் துவங்கினாள், அந்த சிறு கோவேறு கழுதையோ இளைப்பாறி வேகமாய் சுவாசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் நட்சத்திரத்தைக் கவனித்தனர். அது விநோதமான செய்கையாயிருந்தது. அது மற்ற நட்சத்திரங்களைப் போல் செயல்படவில்லை. அது அசைவாடி தவித்துக் கொண்டிருந்ததைப்போல் தென்பட்டது. அது ஏதோ ஒன்றிற்காக காத்துக்கொண்டிருந்தது, ஏதோ ஒன்று சம்பவிக்கக் காத்துக்கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு நிமிடம் நாம் நம்முடைய தம்பதிகளை இங்கேயே பாறையின் மேல் உட்கார்ந்திருக்க விட்டுவிடுவோம். 128 நாம் நம்முடைய சிந்தனைகளை நூற்றுக்கணக்கான மைல்களை தூரத்தில் உள்ள கிழக்கு தேசத்திற்கு செலுத்தி, இந்தியாவில் உள்ள சாஸ்திரிகளைப் பார்ப்போம். அன்றிரவு அவர்களுடைய வழக்கப்படி, அவர்கள் எல்லோரும், ஒரு நட்சத்திரம்.... சூரியன் அஸ்தமித்தபோது, நட்சத்திரங்கள் தோன்றின, அப்பொழுது அவர்கள் ஒரு மலையின் மேலேறி ஒரு கோபுரத்துக்குள் சென்றனர், அது ஒருவிதமாக வான மண்டலத்தை கூர்ந்து ஆய்வது போன்ற கோபுரம், அவர்களோ அங்கு ஆராதிக்கவும், ஆய்வு செய்யவுமே சென்றனர். அவர்கள் அவர்கள் நட்சத்திரங்கள் மூலமாகவே நேரத்தை அறிந்துள்ளனர். அவர்களோ நிகழ்வுகளை ஆராய்ந்தனர். அவர்கள் அங்கு போய், வல்லமையுள்ள தேசங்களின் வீழ்ச்சி, தேசங்களின் மற்றும் இராஜ்ஜியங்கள் போன்றவற்றின் அழிவு முதலியனவற்றை ஆராய்வார்கள். அவர்கள் எப்படியாய் அதைக் குறித்து யோசித்து, அதைக் குறித்துப் பேசுவார்கள். அவர்கள் நட்சத்திரங்களை, அவைகள் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தனர். நாம் வேதாகமத்தை அறிந்திருப்பதுபோல, அவர்கள் அவைகளை அறிந்திருந்தனர். அவைகள் செய்த ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு காரியத்தைப் பொருட்படுத்தியது. 129 தேவன் பூமியிலே தம்முடைய காரியங்களை செய்வதற்கு முன்னர் அவர் வானங்களில் அவைகளை எப்பொழுதும் வெளிப்படுத்துகிறார் என்பது உங்களுக்கு தெரியும். ஊழியக்காரர்கள் அதை அறிந்திருக்கிறார்கள். 130 அவர்கள் அங்கிருந்து நட்சத்திரங்களை கவனித்துக் கொண்டிருந்தனர், ஏனென்றால் அந்த நட்சத்திரத்தில் ஏதாவது ஒன்று நகர்ந்தால், அவர்கள் உடனே வேதவாக்கியங்களினூடாக அவைகளை ஆராய்ந்து பார்த்து, அது என்னவென்பதை கண்டுபிடித்தனர். நீங்கள், "வேதவாக்கியங்களின் மூலமா?” என்று கூறலாம். ஆம். வேதவாக்கியங்களின் மூலமேயாகும். அவர்கள் சாஸ்திரிகளாய் இருந்தனர். ஆனால் அவர்கள் முகமதியர்களாயிருந்தனர், முகமதியர்கள் எப்படி வந்தனர்? அவர்கள் உண்மையாகவே பண்டைய மேதிய-பெர்சியர் சந்ததியில் தோன்றியவர்கள். அங்கிருந்துதான் முகமதியர்கள் தோன்றினர். நாம் யாவரும் அதை அறிந்துள்ளோம். 131 கவனியுங்கள், அவர்களுக்கு அங்கே ஒரு அதிபதி இருந்தான். நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், அது அது தானியேல் 2:43-ல் உள்ளது. தீர்க்கதரிசியாகிய தானியேல்தான் அவர்கள் பாபிலோனிலிருந்தபோது, அவர்களுக்கு அதிபதியாய் இருந்தான். அது முற்றிலும் உண்மை. தானியேல் அவர்களுடைய தலைமை தீர்க்கதரிசியாய் இருந்தான். அவன் தேவனுடைய எல்லாக்காரியங்களையும் அவர்களுக்கு கற்பித்திருந்தான், ஏனென்றால் அவன் அவர்களுக்கு ஒரு அதிபதியாயிருந்தான். அவன் அவர்களிடத்தில், "கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்து, உலகிலுள்ள புறஜாதி ராஜ்யங்கள் எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டு, அது வளர்ந்து பூமியெல்லாம் நிரப்பும்” என்றான். அவன் அதைக் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும். 132 இப்பொழுது, இந்த சாஸ்திரிகள் அவிசுவாசிகளாயிருக்கவில்லை. இல்லை ஐயா. அவர்கள் விசுவாசிகளாயிருந்தனர். அவர்கள் ஒன்றான மெய்தேவனில் விசுவாசங்கொண்டிருந்தனர். அது உண்மையென்பதை நாம் அறிவோம், வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. நீங்கள் அதைப் படிக்க வேண்டுமென்று விரும்பினால், நீங்கள் அப்போஸ்தலர் 10:35-ல் படித்துப் பார்க்கலாம். அதில், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனை அவர் கனப்படுத்துகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, அதே சமயத்தில் அவர்கள் சத்தியத்தின் ஒழுங்கின் முறையில் சரியாக இருக்கவில்லை, ஆனால் நாம் விசுவாசிக்கிற அதே தேவனை அவர்கள் விசுவாசித்தனர். நாம் விசுவாசிக்கிற அதே தேவனையே முகமதியர்கள் விசுவாசிக்கிறார்கள். 133 அந்த முகமதிய குரு பெரிய மணி ஒன்றை எடுத்து அதை அடித்து, “ஜீவனுள்ள மெய்த்தேவன் ஒருவரே, முகமதுவே அவருடைய தீர்க்கதரிசி” என்று கூறுவதை நான் அநேகமுறை நின்று கொண்டு பார்த்திருக்கிறேன். ஜீவனுள்ள மெய்த்தேவன் ஒருவரே, இயேசுவே அவருடைய குமாரன் என்றே நாம் விசுவாசிக்கிறோம். புரிகிறதா? முகமதியனோ, “தேவனுக்கு ஒரு குமாரனேக் கிடையாது” என்று கூறுகிறான். அது ஒரு ஆவியாயிருக்க வேண்டும் என்று அவன் எண்ணுகிறான். நீங்கள் பாருங்கள், எனவே அவன் அவன், “ஜீவனுள்ள மெய்த்தேவன் ஒருவரே, முகமதுவே அவருடைய தீர்க்கதரிசி” என்று கூறினான். அவர்கள் ஒன்றான மெய்தேவனில் இன்னமும் விசுவாசங்கொண்டிருக்கிறார்கள். இஸ்மவேலின் புத்திரர்கள். 134 இந்த முகமதியர்கள் அதை ஆராய்ந்து படித்த போது, அவர்கள் முகமதியர்களாயிருந்தபோதிலும், அவர்கள் சாஸ்திரிகள் என்றே அழைக்கப்பட்டனர் என்பதை நாம் கவனிக்கிறோம், அவர்களோ அந்த நட்சத்திரங்களை கவனித்து வந்தனர். அவர்கள் இரவிலே நெருப்பு மூட்டினர், அது ஒரு பரிசுத்த அக்கினி. இரவிலே எரியும் எந்த பரிசுத்த அக்கினியின் மூலம் அவர்கள் தங்களுடைய தேவனுக்கே பணிவிடை செய்தனர். அவர்கள் நட்சத்திரங்களை கவனித்துப் பார்த்து, ஆராதித்தனர். சூரியன் அஸ்தமித்தவுடன் அவர்கள் ஒவ்வொரு இரவும் மேலேறிச் சென்று, அவர்கள் இந்தக்காரியங்களை ஆராய்ந்து பார்த்தனர். நாம் சிறப்பு கூட்டங்களில் ஒன்று கூடி, வேதாகமத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்து பார்க்கிறோம். அவர்களோ அந்த நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருந்தனர். 135 ஒர் இரவு அவர்கள் அங்கே மேலே இருந்து ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு அந்நிய நட்சத்திரம், ஒரு புதிய நட்சத்திரம் தோன்றினது. அது மிகவும் எச்சரிக்கையை எதிரொலித்தது என்பதில் வியப்பொன்றுமில்லை, அவர்களோ அந்த நட்சத்திரத்தை அதற்கு முன்பு ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்களோ இதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை, அவர்கள் நடுக்கமுற்றதில் வியப்பொன்றுமில்லையே. அவர்களோ அதை இரவு முழுவதும் கவனித்திருப்பார்கள் என்றே நான் யூகிக்கிறேன். அவர்களுக்கோ அதைக் குறித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னே , அது, அது ஒரு அந்நிய நட்சத்திரம். அந்த பெரிய நட்சத்திர கூட்டங்களுக்கு மத்தியில் அங்கே ஒரு நட்சத்திரம் தொங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அது ஒரு அந்நிய நட்சத்திரம், ஒரு அதிசய நிகழ்வாயிருந்தது. அதைப் போன்ற எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் ஒருபோதும் கண்டதேயில்லை. ஆகையால் அவர்கள் இதைக் குறித்து அறிந்து கொள்ள, அவர்கள் துரிதமாக வேதவாக்கியங்களை ஆராயத் துவங்கினர். உண்மையாகவே அவர்கள் தங்களுடைய சொந்த நூல்களில் அவர்கள் ஒன்றையுமே கண்டறிய முடியவில்லை. ஆனால் அவர்கள் தானியேலின் புத்தகத்திற்குத் திரும்பிச் சென்று, "ஒரு கல் வரப் போகிறது, யாக்கோபின் நட்சத்திரம் உதிக்கும்” என்பதை கண்டறிந்தனர். ஏதோ ஒரு காரியம் சம்பவித்துக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் அதைக் குறித்து விவாதித்துவிட்டு, பின்னர் ஒன்று சேர்ந்து ஜெபம் செய்து, உறங்கச் சென்றிருக்க வேண்டும். இராஜாதிராஜா பூமியின் மேல் பிறந்துவிட்டார் என்று அந்த இரவு அவர்கள் சொப்பனங்கண்டிருக்க வேண்டும். 136 அண்மையில் செய்தித்தாளில் சாஸ்திரிகளைக் குறித்து வெளியான செய்தியில், அந்த மூன்று நட்சத்திரங்களும் ஒரே வரிசையில் வந்து ஒரு நட்சத்திரமான போது, மேசியா அப்பொழுது பூமியில் இருந்தார் என்றே நமக்கு கூறப்பட்டிருந்தது. அவர்கள் உண்மையாகவே அங்கிருந்த யூதர்கள், அவர்கள் தங்களுடைய படிப்பில் வான சாஸ்திரத்தை ஆராய்ந்து படித்திருந்தனர். ஆகையால் அப்பொழுது அவர்கள் அவர்கள் அதைக் கண்டபோது, இயேசு எங்கோ பிறந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் அவர் எங்கே பிறந்திருந்தார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர், ஆனாலும் என்ன செய்ய வேண்டும், எப்படி, யார் செல்லப் போவது என்பதைக் குறித்து கண்டறிய அவர்கள் சீட்டுப் போட்டனர். ஆனால் அவர்கள் எல்லோருமே போகவேண்டும் என்று விரும்பினர். ஆயினும் நான் சற்று முன்பு கூறினது போல, மூன்று என்பது சாட்சியின் எண்ணிக்கை, எனவே திரும்பி வந்து அது உண்மையாவென்று சாட்சியாக அறிவிக்க, அவர்கள் வழக்கமாக கூடவே அவர்களை அழைத்துச் செல்வார்கள். ஆகையால் அவர்கள் என்ன செய்தனர்? எனவே அவர்கள் தங்களுடைய வெகுமதிகளை, ஒவ்வொன்றையும் அவருக்கென்று கொண்டு செல்ல மூட்டையாகக் கட்டி ஏற்றினர். 137 சகோதரனே, சகோதரியே, நாம் பெற்றுள்ளதை நாம் கிறிஸ்துவுக்கு கொடுக்க வேண்டியதாயிருக்கும்போது, நாம் சில நேரங்களில், நாம் நமக்கு எவ்வளவு பெற்றுக் கொள்ள முடியும் என்று காண எப்பொழுதும் முயற்சி செய்கிறோமா என்று இன்றிரவு நான் வியப்புறுகிறேன். பாருங்கள், நாம் எவ்வளவு புத்திசாலித்தனமாய் இருக்க முடியும், நாம் எப்படி மற்ற நபரை விட சாதுரியமாயிருக்க முடியும் என்பதை கற்றுக் கொள்ளாமல், நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 138 “தேவன் எனக்கு ஒரு சொப்பனம் தருவாரா, நான் அதையும் கூட நம்பமாட்டேன்” என்று சில ஜனங்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். 139 மேலும், "நான் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டிருக்கவில்லை.” என்கிறார்கள். நான் அதைக் குறித்து அன்றொரு நாள் ஒரு நபரிடம் காண்பித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர், “எத்தனை மருத்துவர்கள் தங்களுடைய பெயர்களை கையொப்பமிட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும், என்னவாயிருந்தாலும், அல்லது இன்னும் அதிகமாகக் கூறினாலும் எனக்குக் கவலையில்லை, நாம் அதை நம்பமாட்டேன், நான் அதை நம்பமாட்டேன்” என்றான். அதற்கு நான், “நீ நிச்சயம் நம்பமாட்டாய். அது உனக்காக அல்ல” என்றேன். 140 தெய்வீக சுகமளித்தல் அவிசுவாசிகளுக்கு அனுப்பப்படவில்லை. அது விசுவாசிகளுக்கே அனுப்பபட்டது. கிறிஸ்து விசுவாசிகளுக்காக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரமேயன்றி; அவிசுவாசிகளுக்கல்ல, அது அவர்களுக்கானதாய்க் கருதப்படவில்லை. அது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான இடறல்கல்லாய் உள்ளது, எப்பொழுதும் அவ்வாறே இருக்கும், எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அது அவிசுவாசிகளுக்கல்ல. அது விசுவாசிக்கிறவர்களுக்கானதாய் உள்ளதே! அது தான். 141 இப்பொழுது இந்த நபர்கள், அவர்கள் விசுவாசிகளாயிருந்தனர் என்று நாம் கண்டறிகிறோம். அவர்கள் கண்டுபிடிக்க விரும்பினர். அவர்களுக்கிருந்த எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு செல்ல எடுத்துக் கொண்டனர். அவர்கள் இது உண்மையா என்று கண்டறிய விரும்பினர். இப்பொழுது, அவர்கள் ஒரு நீண்ட பிரயாணம் மேற்கொண்டனர், எனவே அவர்கள் தங்களுடைய ஐஸ்வரியங்கள் யாவையையும் சேர்த்து, பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம், மற்றும் அவர்களுக்கிருந்த அனைத்தையும் ஒன்றாக சேகரித்து எடுத்துக்கொண்டு, இந்த ராஜாவை கண்டுபிடிக்க ஆயத்தமாயினர். அவர்கள் தங்களுடைய வெகுமதிகளோடு தங்களுடைய பயணத்தைத் துவங்கினர். 142 இந்த ராஜாவைக் கண்டறிய அவர்கள் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பரலோக அடையாளத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றனர் என்பதைக் கவனியுங்கள், ஏதோ ஒரு மனிதனுடைய வேத சாஸ்திரத்தைக் கொண்டு செல்லவில்லை. அவர்கள் அதை வார்த்தையில் கண்டுபிடித்தனர். அது அங்கு இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. அவர்கள் பரலோக அடையாளத்தைப் பின்பற்றினர். 143 அவர்களுக்கு இருந்த துணிவு மாத்திரம் மனிதர்களுக்கு இருக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே! அவர்களுக்கிருந்த புரிந்துகொள்ளுதல் மாத்திரம் இவர்களுக்கும் இருக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே! தேவன் நமக்கு ஏதோ ஒரு காரியத்தை அளிக்கும்போது, அது வேதப் பிரகாரமாக இருந்தால், அதைப் பற்றிக் கொள்ளுங்கள். 144 மனுஷரோ, “பரிசுத்த ஆவியின் அபிஷேம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது” என்கிறார்கள். பரிசுத்த ஆவியின அபிஷேகம் உண்டாயிற்றே! பெந்தேகோஸ்தே நாளில் அது இருந்த விதமாகவே அது இன்றைக்கு உங்களுக்கு உள்ளது, அது அவ்வண்ணமாகவே இன்றைக்கும் உண்டாகிறது, தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை! "அது எடுக்கப்பட்டுவிட்டது” என்று யாருமே வேதத்திலிருந்து விளக்கிக் கூற முடியாது. தேவன் அதை எங்கே சபைக்கு அளித்தார் என்பதை என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடியும். அது எங்கே எடுக்கப்பட்டுவிட்டது என்பதை எனக்கு வேதத்தில் காண்பிப்பீர்களா? அப்படிப்பட்டது அங்கில்லையே! 145 ஏனென்றால், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். வாக்குத்தத்தமானது. பேதுரு பெந்தேகோஸ்தே நாளின் போது, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். வரவழைக்கும் யாவருக்குமே. அப்பொழுது இருந்தது போலவே பரிசுத்த ஆவி இன்றைக்கும் உத்தம இருதயமுள்ளவர்களுக்கு மாறாததாய் உள்ளது. அப்படியில்லையென்றால்... நீங்கள் தேவனை விசுவாசிப்பதும் கூட வழக்கத்திற்கு மாறானதாயிருக்கிறதா? 146 பவுல் அகிரிப்பாவிடம் கூறியதுபோல, அகிரிப்பாவே, தீர்க்கதரிசிகள் கூறியிருக்கிறதை நீர் மறுதலிப்பீரா?” என்று கேட்டான். 147 இயேசு கூறினதை, வேதம் தாமே (அது கிறிஸ்துவாயுள்ளது, அபிஷேகம் பண்னப்பட்ட வார்த்தை) என்று உரைப்பதை நீங்கள் மறுதலிப்பீர்களா? வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் வார்த்தையினால் அபிஷேகம் பண்ணப்பட்ட நபராயிருக்கிறீர்கள். “நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” அது உங்களுக்குள்ளிருக்கிற கிறிஸ்து, இந்த காலத்திற்கான வார்த்தையை அபிஷேகிக்கிறது, அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி. தேவன் தம்முடைய தம்முடைய வார்த்தையை காலங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். ஒவ்வொரு முறையும் அது அந்த நேரத்திற்கு வரும்போது, சபைகள் யாவுமே குழப்பமுற்றிருக்கின்றன. எனவே தேவன் யாரோ ஒருவரை அபிஷேகித்து, அந்த வார்த்தையை அனுப்பி, அவர் கூறினவிதமாகவே வார்த்தையை கிரியை செய்யும்படிச் செய்கிறார். நிச்சயமாக. இந்த நாளுக்கான வார்த்தை தீர்க்கதரிசினமாக உரைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபிக்கவும், ஒரு பிரகாசிக்கும் வெளிச்சமாக இருந்தது, அவிசுவாசிகளின் கண்களைக் குருடாக்கவும், யாரையாகிலும் ஒருவரைக் கண்டுபிடித்து பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ண தேவன் காத்துக்கொண்டிருக்கிறார் என்பது வழக்கத்திற்கு மாறானதல்ல. அவிசுவாசிகள் அதை தேவதூஷணம் உரைத்து, நியாயத்தீர்ப்பை தங்கள் மேல் வருவித்துக் கொள்வார்கள். ஏனென்றால் தேவனுடைய பிரமாணம் நீதியாயுள்ளது, அவருடைய நீதியின் மூலமாகவே நியாயத்தீர்ப்பு வர முடியும். அப்பொழுது அவர் உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தி, அவர் சோதோமியருக்குச் செய்ததுபோல, அதை ஒரு அக்கினி ஜூவாலைக்கு அனுப்புகிறார். இப்பொழுது கவனியுங்கள். 148 அவர்கள் பிரயாணத்திலே தேவனால் அளிக்கப்பட்ட அடையாளத்தை பின் தொடர்ந்தனர் என்று நாம் கண்டறிகிறோம். அவர்கள் கவனித்தனர். அவர்கள் வேறுயாருடைய வார்த்தையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பேராயரிடமோ அல்லது வேறு யாரிடமோ கலந்து ஆலோசிக்கச் செல்லவில்லை. தேவன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர்கள் அதை இங்கு கண்டனர், அது சத்தியமாயிருந்தது, அவர்கள் அதன்படியே பின்தொடர்ந்தனர். அதுவே வழி நடத்தினது. அதுவே வேதத்தில் முன்னுரைக்கப்பட்ட ஒன்றாயிருந்தது. அது வருமென்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் அதைப் பின் தொடர்ந்தனர். அது என்னவாயிருந்தது? அவர்கள் கரங்களை அசைத்து பிரியாவிடைபெற்று, “சகோதரரே, நாங்கள் ஒரு நாள் திரும்பி வருவோம், உங்களுக்கு செய்தியைக் கொண்டு வருவோம், ஏனென்றால் அது உண்மையென்பதை நாங்கள் அறிந்துள்ளோம்” என்று கூறிச் செல்வதை என்னால் காண முடிகிறது. அவர்கள் அதைப் பின்தொடர்ந்து, மலைகளைக் கடந்து, டைகரீஸ் நதியைக் கடந்து, சமவெளிகளைக் கடந்து, அநேக நாட்களாக, அநேக மாதங்களாக, அவர்களால் செல்ல முடிந்த அளவு கடினமாக அந்த நட்சத்திரத்தைக் கவனித்துக் கொண்டே சென்றனர். 149 அநேகமாக பகல் நேரத்தில் அவர்கள் படுத்து இளைப்பாறி உறங்கி, ஒருவர் பக்கம் ஒருவர் திரும்பி, நாம் அங்கு சென்றடையும்போது, அது அற்புதமாயிருக்க வேண்டும்; இந்த பரலோகப் பிரகாசம், இந்த பரலோக வெளிச்சம், நாம் காணும் இந்த இயற்கைக்கு மேம்பட்ட வெளிச்சம்!” என்று பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். 150 ஆமென்! நான் புத்தியீனனாயிருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? நான் பைத்தியமல்ல. நாம் கவனித்துக்கொண்டிருக்கிற இந்த பரலோகப் பிரகாசத்தை, இந்த வெளிச்சத்தைக் கவனியுங்கள். 151 இப்பொழுது வேறு யாரும் அதைக் காணவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அது ஒவ்வொரு வானிலை ஆய்வு கூடத்தையும், ஒவ்வொரு சாஸ்திரியையும் கடந்து வந்தது. ஆனால் அது அவர்களுக்காக அனுப்பப்பட்டது. அவர்கள் அதைக் கண்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள் அதைக் கண்டனர் என்றே வேதம் கூறியுள்ளது. வேறு யாருமே அதைக் காணவில்லை . 152 பவுல் கண்ட ஒளியை வேறு யாரும் காணவில்லை, அதேக் காரியம். அது தமஸ்குவிற்கு போகும் வழியிலே அவனைத் தள்ளிற்று. ஆனால் அது பவுலுக்கு அருளப்பட்டது. 153 பரிசுத்த ஆவியானவர் ஒரு ஒளியைப் போல், ஒரு புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி வருகிறதை யோவானைத் தவிர வேறு யாரும் காணவில்லை. அவன் அதைக் கண்டான், அவன் அதை சாட்சி பகர்ந்தான். அவன் அதைக் கண்டான், மற்றவர்கள் அதைக் காணவில்லை. அவன் கண்டான், ஏனென்றால் அவன் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். சாஸ்திரிகள் அதற்காக எதிர் நோக்கியிருந்தார்களே! 154 நீங்கள் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் உண்மையான கிறிஸ்துமஸ் அன்பளிப்பை, உண்மையான கிறிஸ்துமஸ் வெகுமதியை, தேவனுடைய கிறிஸ்துமஸ்வெகுமதியை, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும்போது, நீங்கள் அதற்காக எதிர் நோக்கிக் கொண்டிருந்தால், நீங்கள் அதைக் காண்பீர்கள். அது தேவனிடத்திலிருந்து, பரலோகத்திலிருந்து, இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகர அனுப்பப்பட்ட ஒரு பரலோக ஒளியாயிருந்தது. 155 இப்பொழுது, அவர்கள் வேறு யாருடைய வார்த்தையையும் ஏற்றுக்கொள்ளவில்லை.பகல் நேரத்திலும், பொறுமையற்றேயிருந்தனர். அவர்கள், என்னால் காத்திருக்க முடியாது. இன்னும் நாம் எவ்வளவு தூரம் செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை . நாம் அநேகமாக எருசலேமுக்கு அல்லது புனித தேசங்களான பாலஸ்தீனா வரைக்கும் செல்ல வேண்டியிருக்கலாம், ஏனென்றால் அங்குதான் இந்த ஒருவர் பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாம் அதை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ கண்டு பிடிப்போம்” என்று கூறியிருப்பார்கள். இரவு நேரம் வர, இருள் சூழ ஆரம்பிக்கிறது. 156 இருளில் மாத்திரமே வெளிச்சம் பிரகாசிக்கிறது என்பது நினைவிருக்கட்டும். அந்த வழியில் மாத்திரமே அது அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறது. மனிதரும் கோட்பாடும் ஜனங்களை தேவனுடைய வார்த்தையிலிருந்து புறம்பாக்கின இருளின் காலத்தில் நாம் எப்பொழுதாவது வாழ்ந்திருந்தால், அது இன்றைக்கு தான். இந்த ஸ்தாபனங்கள் ஜனங்களை தேவனுடைய வார்த்தையைத் தவிர மற்றெல்லா காரியங்களிலும் கட்டிப் போட்டுள்ளன. அதன் விளைவாக உலக சபைகள் ஆலோசனை சங்கத்திற்குள் நடந்து சென்று, எல்லாவிதமான அவிசுவாசிகளுடனும் தங்களை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் குருடாயிருப்பார்கள். வேதம், “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” என்று உரைத்துள்ளது. நம்முடைய சபைகளோ அத்தகைய ஒரு கதம்ப கூளத்திற்குள்ளாக சென்று கொண்டிருக்கின்றன. நிச்சயமாகவே, அவர்கள் குருடாயிருக்கிறார்கள். ஆனால் அந்த அந்தகார வேளையில்தான் வெளிச்சம் தோன்றுகிறது. அப்பொழுதுதான் வெளிச்சம் பிரகாசிக்கிறது. 157 அவர்கள் அதைக் கவனித்தனர். இரவு வந்தபோது, அவர்கள் களிகூர்ந்து, “அப்படியே தொடர்ந்து வழி நடத்திச் செல், மேற்கு திசை நோக்கி வழி நடத்திச் செல், இன்னமும் சென்று கொண்டேயிருந்து, அந்த பரிபூரண ஒளியினண்டைக்கு எங்களை வழி நடத்திச் செல்” என்றனர். அவர்கள் ஆறுகளைக் கடந்து, மணல் மேடுகளைக் கடந்து சென்று, சத்தியத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருந்தது. 158 கவனியுங்கள், பெத்லகேம் யூதேயாவுடன் சரியாக நேர்க்கோட்டில் அமைந்திருந்தது, அங்கிருந்து அவர்கள். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து எருசலேம் பெத்லகேமுடன் நேர்க்கோட்டில் அமைந்திருந்தது. கவனியுங்கள். உங்களால் அதைப் புரிந்துகொள்ளக் கூடுமானால், என்ன ஒரு அடையாளம்! பெத்லகேம் இங்கு உள்ளது. எருசலேம் இங்கு உள்ளது. சாஸ்திரிகள் புறப்பட்ட இடத்திலிருந்து பெத்லகேமை அடைவதற்கு முன்னர், அவர்கள் முதலில் எருசலேமுக்கு வர வேண்டியதாயிருந்தது. உங்களுக்கு அது புரிகிறதா? அந்த பெரிய, மகத்தான, சுயமாய் பாவித்துக் கொண்ட, ஸ்தாபன தலைமை அலுவலகம், (ஆம், ஐயா) எருசலேம், அங்கே எல்லா ஸ்தாபனங்களும் ஒன்று கூடின. அந்த மகத்தான ஆலோசனை சங்கம் அங்கு கூடி சந்தித்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் இந்த மனிதர்கள், அவர்கள் வந்து, அவர்கள் இந்த நகரத்திற்கு வந்த போது, “அதோ அது உள்ளதே! எவரேனும் இதைக் குறித்து அறிந்திருந்தால், இந்த மகத்தான் ஒளியின் இரகசியத்தை எங்களுக்கு விளக்கிக் கூறலாம், அங்கே எல்லா பிரதான ஆசாரியர்களும் இருந்தனர். தெய்வீகத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இருந்தனர், அங்கு Ph.D., L.L.D பட்டம் பெற்றோரும், மற்றும் இந்த மாதிரியானவர்கள் எல்லோருமே அங்கு இருந்தனர். எனவே அவர்கள் இதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருப்பார்கள். சகோதரரே, எருசலேம் கண்களில் தென்பட்டுவிட்டதே! இதோ நாம் போகிறோம், நாம் அதை அறிந்து கொள்வோம்” என்றே அவர்கள் எண்ணிக்கொண்டனர். அவர்களோ வீதிகளில் வேகமாய்ச் சென்றனரே! "நீங்கள் எங்கே போகிறீர்கள்?” “நாங்கள் ஒரு மகத்தான செய்தியைப் பெற்றுள்ளோம்.” "அது என்ன ?” 159 “யுதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? இங்கே மேலேயுள்ள இந்த ஒளியின் இரகசியம் என்ன? யார், அவர் எங்கே இருக்கிறார்?” இந்த ஐஸ்வரியவான்கள் அருமையாய் உடுத்தியிருந்த ஒட்டகங்களின் மேல் ஏறிக்கொண்டு, பொன்னும் தூபவர்க்கமும் கொண்டவர்களாய், ஒவ்வொரு வீதியின் வழியாகவும், சந்தின் வழியாகவும் மேலும் கீழும் ஓடிச் சென்று, “அவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கே?” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்களிடத்தில் பதில் இல்லாதிருந்தது என்பதை சாஸ்திரிகள் கண்டு கொண்டனர். 160 இன்றைய பெரிய கூக்குரல், "கம்யூனிஸம் நம்மேல் வந்துள்ளது” என்பதாகும். ஒவ்வொரு வானொலி ஒலிபரப்பும் எப்பொழுதுமே கம்யூனிஸத்தை தாக்கிக்கொண்டேயிருக்கிறது. உங்களால் கம்யூனிஸத்தை நிதானிக்க முடியும்; ஆனால் காலத்தின் அடையாளத்தையோ, உங்களால் நிதானித்து அறிய முடியவில்லை. 161 இயேசு, “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” என்றார். 162 எப்பொழுதுமே, 'கம்யூனிஸம்! கம்யூனிஸம்!” என்பதைக் குறித்தேப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அது வேறொன்றுடன் சம்மந்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டு கொள்வது மேலானது. 163 நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இது சம்பவிப்பதற்கு முன்பு, தேவன் கடைசியாக காண்பிக்கப்போவதாக கூறின அடையாளம் என்ன? அவர் கூறினக் காரியங்கள் என்ன? இஸ்ரவேல் தன் சொந்த நாட்டில் இருக்கிறாள், அத்தி மரம் மீண்டும் துளிர்விடத் துவங்கிவிட்டது. ஒவ்வொரு காரியமும் சரியான ஒழுங்கு முறையில் அமைந்துள்ளதைப் பாருங்கள். சபையும் லவோதிக்கேயா நிலையையடைந்து, இயேசு வெளியே நின்று கொண்டு, தம்முடைய சொந்த சபைக்கு ஒரு அகதியாயிருக்கிறார். தாவீது தன் சொந்த ஜனங்களுக்கு ஒரு அகதியாய் பெத்லகேமில் இருந்தது போலவேயாகும். ஒரு நாடோடி! கிறிஸ்து தம்முடைய சொந்த ஜனங்களுக்கு ஒரு நாடோடியாய் இருக்கிறார் என்று வேதம் உரைத்துள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற லவோதிக்கேயா காலத்தில், "கிறிஸ்து வெளியிலிருந்து கதவைத் தட்டிக்கொண்டு, உள்ளே வர முயற்சிக்கிறார்” என்று வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது, தம்முடைய சொந்த ஜனங்களுக்கு ஒரு நாடோடியாய் இருக்கிறார். 164 அப்பொழுது அந்த போர்சேவகர்கள் தங்கள் பட்டயங்களை கையிலெடுத்தார்கள், தாவீதோ சுத்தமான குடி தண்ணீருக்காக கதறினான். அவர்கள் பதினைந்து மைல்களினூடாக நின்றிருந்த மனிதர்களை வெட்டி வீழ்த்தி, அந்த வழியாக கடந்து சென்று அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தனர். தாவீதோ அதை ஒரு பலியாக, ஒரு பானபலியாக தரையிலே ஊற்றிப் போட்டான். 165 ஆம், இன்றைய போர்வீரர்களே, இயேசு நல்லதும், புதியதுமான பழைய பெந்தேகோஸ்தே தண்ணீரைக் குடிக்கவே விரும்புகிறார். இந்த ஸ்தாபன, தேங்கிக்கிடக்கும் தண்ணீர் அவருக்கு சுகவீனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும் இடத்தை நாம் அடையும் மட்டும், தேவனுடைய வார்த்தையை வெளியே உருவி எடுத்துக் கொண்டு, இந்த எல்லா கோட்பாடுகள் மற்றுமுள்ள காரியங்களினூடாக வெட்டி வீழ்த்திக் கொண்டு செல்வோம். ஒரு உண்மையான, ஒரு அசலான இருதயத்தோடு உண்மையாய் ஆராதிப்போம். அவர் தம்முடையதை ஊற்றி, இந்த நாளில் தம்முடைய வார்த்தையை ஜீவிக்கச் செய்கிறார். அவர் அதைப் பெற்றுக்கொள்வார். அவர், “ஜனங்களின் விசுவாசத்தை, பிள்ளைகளின் விசுவாசத்தை, பிதாக்களிடம் திருப்புவதாக வாக்களித்தார். அது வரும் என்று மல்கியா 4 உரைக்கிறது, அது அங்கிருக்கும். அது சரியாக அங்கிருக்கும், நீங்கள் கவலைப்படாதீர்கள். தேவன் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளார். அவ்வளவுதான். கடிகாரமோ சரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம் ஐயா, ஆனால் நாம் அந்த மகத்தான, இன்றைக்கு நாம் காண்கிற... 166 கம்யூனிஸம் ஏன் வந்து கொண்டிருக்கிறது? உலகம் ஏன் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது? ஏன் ருஷியா ஒரு சதவீதமாய் உள்ளதே? அது கம்யூனிஸமாய் உள்ளது. தொண்ணூற்றொன்பது சதவிகிதம் இன்னமும் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். ருஷியாவின் ஒரு சதவீதம் ஏறக்குறைய உலகின் மற்ற பாகங்களை, கிழக்கத்திய நாடுகளை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸம். ஏன்? அது ஏன் அதைச் செய்ய்ய முடிந்தது? அது அப்படி செய்யும் என்று வேதம் கூறியுள்ளது; அவர் அதற்கான பதிலை வைத்துள்ளார். 167 ஆனால் நீங்கள் பாருங்கள், நாமோ இப்பொழுது இதற்கும், அதற்கும் சண்டையிட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கவனிப்பதற்காகவே தேவன் அனுப்பியுள்ள அந்தக் காரியத்தை, நாம் அதைக் காண்கிறதில்லை. 168 அவர்களோ, அவர்களுடைய ஆடைகளில் எந்தவிதமான பொத்தான்களை வைத்து தைக்க வேண்டும் என்றும், அடுத்த மாநாட்டில் யார் முக்கியப் பேச்சாளாராய் இருக்க வேண்டும் என்பது போன்றவைகளை, அது போன்ற ஏதோ ஒன்றை கண்டறிந்து ஒழுங்கு படுத்த முயற்சிக்கின்றனர். 169 இங்கேயோ சாஸ்திரிகள் தங்களுடைய பரலோக வெளிச்சத்தை கவனித்துக்கொண்டே பயணித்து வந்து, "நான் எருசலேமை அடையும்போது, நமக்கு மேலே இருந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிற இந்த பரலோக இரகசியமான தெய்வீக ஒளி என்ன என்பதை அவர்கள் எனக்குச் சொல்லுவார்கள்” என்று கூறிக்கொண்டனர். அவர்கள் தெருக்களில் இங்கும் அங்கும் சென்று, "அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கில் கண்டோம். எனவே நாங்கள் அவரைத் தொழுது கொள்ள வந்திருக்கிறோம். நாங்கள் பொன்னையும், தூபவர்க்கத்தையும் வைத்துள்ளோம், நாங்கள் எல்லாவற்றையும் அவருக்காக வைத்துள்ளோம். அவர் எங்கே? அவர் எங்கே ? 170 அவர்கள், “யாரை எங்கே என்று கேட்கிறீர்கள்? என்ன?” என்றனர். அது அந்தவிதமாகவே இன்றைக்கும் உள்ளது. அவர்கள், அதைப் போன்ற ஒரு காரியம் இன்றைக்கு சம்பவிக்கவில்லையே” என்று கூறினர். சூரியன் அஸ்தமித்தபோது, நாங்கள் ஒரு இரகசியமான தெய்வீக ஒளியினைக் கண்டோம்.” “நான் அதை ஒருபோதும் கண்டதில்லையே.” “கோபுரத்தின் மேலுள்ள ஜாமக்காரனைக் கூப்பிடுங்கள்.” “நீ அந்தவிதமான ஒரு இரகசியமான் ஒளியைக் கண்டாயா?” “நீங்கள் என்னக் கூறுகிறீர்கள்?” “நீ ஏதாவது இரகசியமான தெய்வீக ஒளியினைப்... பார்த்தாயா?” 171 “இல்லையே! உங்களுக்கு என்ன நேர்ந்தது?” பாருங்கள், அவர்கள் அதற்கான பதிலை உடையவர்களாயிருக்கவில்லை. 172 இன்றைக்கு அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லையே! இந்தக் காரியங்கள் என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, அவர்கள் அங்கு அதை அறிந்திருக்க வேண்டும், அங்கிருந்த பெரிய சபைகளின் தலைவர்கள் இந்தக் காரியங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும்படிக்கு அவைகளை அறிந்திருக்க வேண்டும். ஆனால் தேவன் எப்பொழுதுமே சிறுபான்மையினரிடமே கிரியை செய்கிறார், அது மிகவும் எளிமையாயிருப்பதால், அது அவர்களுக்கு மேலாக கடந்து சென்று விடுகிறது. அவர்களோ அதை அறிந்து கொள்வதில்லை. ஆனால் அதே சமயத்தில் அவர் தம்முடைய வார்த்தையை அதைப் போன்றே நிறைவேற்றுகிறார். அதுதான். நாம் இந்தப் பெரிய காரியங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறபடியால், நம்மால் அசைய முடியவில்லை. (தேவனே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையைக் காணும்படிக்கு எங்களை அந்தக் காரியங்களிலிருந்து கட்டவிழ்த்து விடுவித்தருளும்) தேவன் ஒரு சொப்பனத்தின் மூலமாக மீண்டும் கிரியை செய்ய வேண்டுமானால், அவரால் இதை உங்களுக்கு வெளிப்படுத்த முடியும். நிச்சயமாகவே, அவரால் முடியும். நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். 173 அவர்கள் அந்த மர்ம ஒளியைக் குறித்த பதிலை உடையவர்களாயிருக்கவில்லை, அவர்கள் தலைமை அலுவலகத்திலும் அதற்கு பதிலைப் பெற்றிருக்கவில்லை . அவர்கள் இன்றைக்கும் பதிலை உடையவர்களாயிருக்கவில்லை. ஆகையால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டுவரும்படிக் கூறினர். அதுவே ஆலோசனையாயிருந்தது. எனவே அவர்கள், "நாம் தேவனுடைய வார்த்தையில் நோக்கிப் பார்த்து, இந்தக் காரியங்கள் எங்கேயிருக்கின்றன என்பதைக் கண்டறிவோமாக,” என்றுக் கூறினர். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வரும்படிக் கூறினபோது, இன்றுள்ள அநேக ஜனங்களைக் காட்டிலும் சாஸ்திரிகள் புத்திசாலிகளாயிருந்தனர். எனவே அவர்கள் அதற்கான பதிலைப் பெற்றிருக்கவில்லையென்றும், அதைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லையென்றும் சாஸ்திரிகள் தேவனுடைய வார்த்தையின்படி கண்டு கொண்டனர். ஆமென். அது அந்தப் பட்டணத்தில் இருக்கவில்லையென்றும், அது அந்த இடமாயும் கூட இருக்கவில்லையென்றும் அவர்கள் கண்டு கொண்டனர். அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டியதாயிருந்தது. ஆமென். அதுவே மிகச் சிறியதாயும், அவை எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகத் தாழ்வானதாயும், மிகச் சிறிய இடமாயும் இருக்க வேண்டுமே தவிர, தன்னைப் பெரிதாக பாவித்துக்கொள்ளும் இடமல்ல. சாஸ்திரிகளோ அதை துரிதமாகவே கண்டு கொண்டனர். அவர்கள் அதற்கான பதிலைப் பெற்றிருக்கவில்லையென்றும், அதைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தினது. எனவே அவர்கள் அந்த குழப்பத்திலிருந்து வெளியேறினர். ஆகையால், அவர்கள் அதை விட்டுச் சென்றனர். அல்லேலூயா, அவர்களுக்காக அவர்கள் அதைவிட்டுச் சென்றனர். 174 அவர்கள் அந்தக் குழப்பத்தைவிட்டு வெளியேறினவுடனே, இயற்கைக்கு மேம்பட்டது மீண்டும் தோன்றினது. அங்குதான் காரியமே உள்ளது. அவர்கள் அந்தக் காரியங்களிலிருந்து விடுவித்துக்கொண்டப் பிறகே அவ்வாறு தோன்றினது. அவர்கள் அங்கிருந்த அந்த கதம்ப கூளத்தைவிட்டு வெளியேறின பிறகே, அந்த பெரிய தலைமை அலுவலகம் இருந்த இடத்தில் வீண் சந்தடியும், வாக்குவாதமும் இருந்தது. எல்லா பெரிய பிரதான ஆசாரியர்களும், தெய்வீக பாண்டித்தியம் பெற்றவர்களும், எல்லோரும் தங்களுடைய தத்துவப் படிப்பு பட்டங்களோடும், தங்களுடைய மகத்தான, பெரிய உயரமான தலைப்பாகையுடன் சுற்றி நடந்துகொண்டிருந்தனர். அவர்களால் அதற்கான நட்சத்திரத்தைப் பார்த்திருக்க முடியாது. அந்தவிதமாக நடந்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டக் காரியங்கள் ஏராளமாக ஜனங்களை குருடாக்குகிறது, பெரிய பெயர்கள்; பெரிய மனிதர்களாய் நடந்து கொண்டிருத்தல் போன்றவையேயாகும். 175 அவர்களில் அநேகர், “அதைப் போன்ற ஒரு காரியமேக் கிடையாது. நானூறு வருடங்களாக, நாங்கள் அப்படிப்பட்ட ஒரு காரியத்தையும் கேள்விப்பட்டதேயில்லை. இந்த பைத்தியக்கார ஜனங்களோடு உள்ள காரியம் தான் என்ன? எனவே அவர்களுக்கு சொந்தமான இந்தியாவிற்கே அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்றனர். 176 “என்ன? தேவனுடைய வார்த்தை , அதைக் குறித்து என்ன? அவர், "யூதேயாவிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார். ஆனால் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு...” கூறியுள்ளாரே. அப்பொழுது அவர்களோ, "ஓ, நாங்கள் தவறான இடத்தில் இருக்கிறோம்” என்றனர். "நாங்கள் இந்தவிதமான எந்த காரியத்துடன் சேரமாட்டோம்.” 177 ஆகையால், அவர்கள் தங்களுடைய ஒட்டகங்களைத் திருப்பிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறினவுடனே, அந்த ஒளி மீண்டும் தோன்றிற்று. இயற்கைக்கு மேம்பட்டது மறுபடியும் அவர்களிடத்தில் அசையத் துவங்கினது. ஓ, என்னே! சாஸ்திரிகள் அவர்களுடைய முறைமைகளிலிருந்து வெளியேறினவுடனே, அப்பொழுது அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதைப் பின்தொடரத் துவங்கினர். ஆகையால் அவர்கள் அதிலிருந்து வெளியேறினவுடனே, பரலோகத்திலிருந்து இயற்கைக்கு மேம்பட்ட ஒளி அவர்களுக்கு மீண்டும் தோன்றினது. 178 இந்தக் காரியங்களை விசுவாசிக்காத அவிசுவாசிகளின் கூட்டத்தில் நீங்கள் கட்டப்பட்டிருக்கும் வரை, உங்களால் ஒருபோதும் காணவே முடியாது. நீங்கள் வௌவாலைப்போல குருடாயிருப்பீர்கள். அப்படிப்பட்ட எல்லாக் காரியத்திலிருந்தும் உங்களை துண்டித்துக் கொள்ளுங்கள்; அது தாயாயிருந்தாலும், தகப்பனாயிருந்தாலும், சகோதரியாயிருந்தாலும், ஸ்தாபனமாயிருந்தாலும் அல்லது அது வேறு என்னவாயிருந்தாலும் சரி. "தன்னைத்தான் வெறுத்து என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்கிற எவனும் உழவுக்குப் பாத்திரனல்ல.” சகோதரனே, சகோதரியே, நான் இதை உங்களுக்குக் கூறட்டும், ஒரு அசலான, உண்மையான கிறிஸ்தவ வெளிச்சம் இன்றிரவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, அது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதேயாகும். எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொள்ளுங்கள். அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் எப்பொழுதுமே வார்த்தையாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை பரிபூரணமானதாயுள்ளது. அது சுயதோற்றமான பொருளையுடையதாயிராது. நீங்களோ, "அது இதைப் பொருட்படுத்துகிறது” என்று கூறுகிறீர்கள். 179 அது என்ன கூறுகிறதோ அதுதான் அதன் அர்த்தம். வேதம், “அது சுயதோற்றமான பொருளையுடையதாயிராது” என்று கூறியுள்ளது. அது கூறுகிறதென்றால், அது "கருப்பை கருப்பென்றும், வெள்ளையை வெள்ளையென்றும்” கூறினால், அது தான் அது. அதுவே முடிவானதாயுள்ளது. அதுவே முற்றிலுமானதாயுள்ளது. தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அதற்கு கட்டப்பட்டிருக்கிறான், என்ன நேர்ந்தாலும், அதிலிருந்து ஒன்றுமே அவனைப் பிரிக்க முடியாது. அவன் அந்த வார்த்தைக்கு இணைக்கப்பட்டிருக்கிறான், ஏனென்றால் அது கிறிஸ்துவாயுள்ளது. கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். கிறிஸ்துவினால் தம்முடைய வார்த்தையைக் குறித்து பொய்யுரைக்க முடியாது, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருக்கிறார். நீங்களோ, “நல்லது, அவர் அதைக் கூறினார் என்று எனக்குத் தெரியும், ஆனால்!” என்று கூறுகிறீர்கள். 180 அதற்கு ஆனால் என்ற எதுவுமே கிடையாது, அதைக் குறித்து அதுபோன்றதே கிடையாது. அவர் அந்த விதமாக அதை உரைத்திருந்தால், அதுதான் அது. அவரால் அதை மாற்ற முடியாது. அவரால் முடியாது. அவர் மாறதவராயிருக்கிறார். அவர், "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை, ஒரு போதும் தவறுவதில்லை ” என்றார். அது அதனுடைய காலத்தில் அங்கிருக்கும். அதைப் பிரகாசிக்கச் செய்ய யாராகிலும் ஒருவர் அங்கிருப்பார். அது உண்மை . 181 இந்த குமாரன் அங்கிருப்பார் என்ற அந்த வார்த்தையை தேவன் உரைத்தார், அவரே அதைப் பிரகாசிக்கச் செய்ய அங்கிருந்தார். அது பரலோகத்திலிருந்து வருகை புரிந்த நட்சத்திரமாயிருந்தது; அவர்களோ அதைக் கவனித்துக் கொண்டிருந்து, அதண்டைக்கு நேராக வந்தார்கள். எனவே அவர்கள் அந்த பழைய கோட்பாட்டை விட்டுவிட்டு, மீண்டும் இயற்கைக்கு மேம்பட்டதைப் பின் தொடரத் துவங்கினர், அதைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் எவ்வளவாய்க் களிகூர்ந்தனர்! வேதம், “அவர்கள் மீண்டும் அந்த ஒளி தோன்றினதைக் கண்டபோது, ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்” என்று கூறியுள்ளது. 182 சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஒவ்வொருவரும், நாம் ஒவ்வொருவரும், நானும், நாம் ஒவ்வொருவரும் இங்குள்ள இந்த எல்லா கிறிஸ்துமஸ் அலங்காரத்தையும், பாருங்கள், இந்த ஒருவர் மற்றவருக்கு பரிமாற்றம் செய்து கொள்ளுகிற எல்லா வெகுமதிகளையும், இந்த உலகத்தின் அர்த்தமற்ற எல்லாவற்றையும், நம்முடைய பெருமையையும் எடுத்துப் போட்டுவிட்டு, இவை யாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, அந்தக் காரியத்தை நம்முடைய பாதத்தின் கீழே போட்டு மிதித்துவிட்டு, "கர்த்தராகிய இயேசுவே, என்னை அந்த பரிபூரண ஒளியண்டை வழி நடத்தும்” என்று கூறினால் எவ்வளவு அருமையாயிருக்கும். அப்பொழுது இயற்கைக்கு மேம்பட்ட ஏதோக் காரியம் சம்பவிப்பதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஒரு தனிப்பட்ட சிறப்பான விதத்தில் வருவார். புரிகிறதா? 183 அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதை பின் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் எதை விட்டுவிட்டார்கள்? அவர்கள் அந்த நாளின் பரலோக அடையாளத்தைப் பின் தொடர்ந்தனர், அது தேவனால் அருளப்பட்ட பரலோக அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும் அது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா? அது தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பரலோக அடையாளமாய் இருந்தது. அவர்கள் வார்த்தை மாம்சமானதைக் கண்டறியும் வரையில் அந்த அடையாளத்தைப் பின் தொடர்ந்தனர். அவர் வார்த்தை மாம்சமாக்கப்பட்டவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த நாளின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரலோக அடையாளம் அவர்களை வார்த்தை மாம்சமானவரண்டைக்கு வழி நடத்தியது. 184 சகோதரனே, சகோதரியே, அவர் இன்றிரவும் அதையே செய்வார். நாம் பெற்றுள்ளதான, பரலோகத்திலிருந்து வந்த இந்த மகத்தான அடையாளத்தை, நமது மத்தியில் வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியை, அதைப் பின்பற்றுங்கள். ஏதோ ஒன்று உங்களுடைய இருதயத்தில், "நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் சபையில் சேர்ந்து கொள்வதைக் காட்டிலும் அதிகம் செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன்” என்று அசைவாடிக் கொண்டிருக்கிறது. 185 "நான் ஒரு நல்ல வியாபாரத்தை உடையவனாயிருக்கிறேன். அது விருத்தியடைந்து கொண்டிருக்கிறது என்பதை நான்-நான் அறிவேன்.” சகோதரனே, இந்நாட்களில் ஒன்றில் விடியற்காலை நான்கு மணிக்கு மாரடைப்பால் நீ மரித்து போகலாம், அப்பொழுது நீ அந்த வியாபாரத்தையும் விட்டுச் செல்ல வேண்டும் என்பதை நீ அறிவாயா? அப்பொழுது அதற்குப் பிறகு நீ எங்கே செல்லப் போகிறாய்? 186 [ஒலி நாடாவில் காலி இடம்-ஆசி.]...உங்களுடைய மாம்சத்தில் ரூபகாரப்படுத்தப்படுமானால், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியினால் பிறந்த நபராயிருக்கிறீர்கள். நீ அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பவில்லையா? அது யாரும் பெறக் கூடிய மிகப்பெரிய கிறிஸ்துமஸ் வெகுமதியாய் இருக்குமல்லவா? நித்திய ஜீவனின் வெகுமதி. "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” 187 “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்.” 188 நாகரீகமானது சூரியனோடே கிழக்கிலிருந்து மேற்கிற்கு பயணித்துள்ளது. நாமோ இப்பொழுது மேற்குக் கரையில் இருக்கிறோம், கிழக்கும் மேற்கும் சந்தித்துள்ளன, நாம் இனிமேல் செல்ல முடியாது. மிகவும் பழமையான நாகரீகம் உலகின் மற்ற பாகத்திலுள்ள சீனா தேசமாகும். நினைவிருக்கட்டும், அது போய்விட்டது... 189 பாவமானது நாகரீகத்துடன் பயணம் செய்துள்ளது. நாம்... இது கூறுவதற்கு கடினமாய் உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் சகோதரனே, சகோதரியே, ஒரு மனிதனுடைய இருதயத்தின் சிந்தைகளையும், நோக்கங்களையும், ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன் அறிந்துகொள்ள முடியும். நீங்கள் அதைக் கவனித்திருக்கிறீர்கள், அதன் பேரில் மற்றவர்களையும் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் நின்று ஒரு நபரை கவனித்துப் பாருங்கள், அவர் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகள் பேசட்டும், அப்பொழுது அங்கு வண்டுகள் பறப்பதை உங்களால் காண முடியும்; பாருங்கள், அந்த அபிஷேகம் அவர்களோடிருப்பதை அவர்கள்அவர்கள் புரிந்து கொள்வார்கள். மனிதனுடைய ஒவ்வொரு நினைவும் நித்தம் பொல்லாததாகவே உள்ளது. நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, அது உள்ளது, மனிதனை உண்டாக்கினதற்காக தேவன் மனஸ்தாபப்பட்டார். எனவே அவர், "மனுஷனை பூமியின் மேல் வைக்காமல் அவனை நிக்கிரகம் பண்ணுவேன்” என்றார். நாம் மீண்டும் அதேக் காலத்திற்கே திரும்பி வந்திருக்கிறோம். கவனியுங்கள். 190 ஆனால் அவர் எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு செல்ல விரும்புகிற ஒரு சிறு சபை அவருக்கு உண்டு. முதலாம் ஜாமம், இரண்டாம் ஜாமம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஜாமங்களில் நித்திரையடைந்து, பூமியில் படுத்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர் அவருக்கு உள்ளனர். இதுவோ ஏழாம் ஜாமமாய் உள்ளது. அவர் ஏழாம் ஜாமத்தில் வருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த ஜாமத்தில் அவர் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளையும், தங்களுடைய தீவட்டிகளில் எண்ணெய் இல்லாத கன்னிகைகளையும் கண்டார். எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாய் உள்ளது. இன்றிரவு உங்களுடைய தீவட்டியில் எண்ணெய் இல்லையென்பதை நீங்கள் கண்டறிந்திருந்தால், என் சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஏன் அந்த தேவனுடைய மகத்தான கிறிஸ்துமஸ் வெகுமதியை பெற்றுக்கொள்ளக் கூடாது? 191 உங்களுக்குத் தெரியும், நாம் இன்றைக்கு ஒரு மகத்தான், பெரிய அன்பளிப்பை வாங்குகிறோம், நாம் அந்த அன்பளிப்பினை காகிதத்தால் சுற்ற, அதைச் சுற்றித் தருவதற்கோ மூன்று டாலர்களை செலவழிக்கிறோம், அதன்மேல் எல்லாவிதமான அலங்காரமும் செய்கிறோம். இது ஒரு மகத்தான் அன்பளிப்பு என்று அநேக சமயங்களில் நீங்கள் நினைக்கிறீர்கள். அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ, இரண்டு ஸ்திரீகள் நின்று ஒரு கடையில் பேசிக் கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவள் தன் தந்தைக்கு வாங்கப் போவதாகக் கூறினாள். அப்பொழுது அவள் பேசிக் கொண்டிருந்த அவளுடைய சகோதரியோ, "அப்பாவுக்கு என்ன வாங்கப் போகிறாய்?” என்று கேட்டாள். . 192 அதற்கு இவளோ, “நான் அவருக்கு ஒரு சீட்டு கட்டும், ஒரு பெட்டி சிகரெட்டுகளும் வாங்கித் தரப்போகிறேன்” என்றாள். 193 அப்பொழுது மற்றவளோ, "நான் ஒரு குப்பி மதுபானத்தை அவருக்கு வாங்கிவிட்டேன், எனவே நான் அதை காகிதத்தால் சுற்றித் தரப்போகிறேன்” என்றாள். பாருங்கள் வெளிப்புற அலங்காரம் உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதில்லை. புரிகிறதா? 194 ஆனால் தேவனோ இன்றிரவு உங்களுக்காக ஒரு கிறிஸ்துமஸ் அன்பளிப்பை வைத்திருக்கிறார். அவர் அதை ஒரு முன்னணையில் சுற்றிவிட்டார். வெளிப்புறம் ஒன்றும் பிரமாதமாக இருக்கவில்லை, ஆனால் உட்புறத்திலோ நித்திய ஜீவன் உள்ளது. இன்றிரவு நீங்கள் இந்த அற்புதமான பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வாழ்க்கையில் ஈடுபட்டு, உங்களை நித்திய வெளிசத்திற்கு வழி நடத்த நீங்கள் அனுமதிப்பீர்களா? நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 195 இந்த அமைதியான நேரத்தில், இந்த கோர்வையற்றதாய் அளிக்கப்பட்டுள்ள இந்த செய்தியை, நான் ஒரு கிறிஸ்துமஸ் செய்தி என்று அழைக்கக் கூடுமானால் நலமாயிருக்கும், ஆனால் இதுவும் அவைகளில் ஒன்றாகும். இது சத்தியம் என்று நீங்கள் உண்மையாகவே விசுவாசிப்பீர்களேயானால், நீங்கள் இதுவரை அந்த நித்திய வெளிச்சத்தை ஒரு போதும் கண்டடைந்திராமலிருந்தால், நீங்கள் அந்த ஒளியினண்டைக்கு மகத்தான் பரிசுத்த ஆவியானவர் உங்களை வழி நடத்த ஒரு போதும் அனுமதிக்காமலிருந்திருந்தால், நீங்கள் இப்பொழுதே உங்களுடைய இருதயத்தில் பேசி, “கர்த்தராகிய இயேசுவே, நான் அந்த ஒளியை கண்டடைய விரும்புகிறேன். மற்றவர்கள் என்னக் கூறினாலும் எனக்குக் கவலையில்லை , அது எனக்கு, நான், நான் அந்த ஒளியைக் கண்டடைய விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுது நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? உங்களுடைய கரத்தினை உயர்த்தி, "சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபியுங்கள், நான் உண்மையாகவே அந்த ஒளியைக் கண்டடைய விரும்புகிறேன்” என்று கூறுங்கள். பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக். பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மற்ற யாரேனுமிருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்தி, "எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும், எனக்கு தேவனுடைய கிறிஸ்துமஸ் அன்பளிப்பு வேண்டும்” என்று கூறுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராம். வேறு யாரேனுமிருந்தால், “எனக்கு தேவனுடைய கிறிஸ்துமஸ் அன்பளிப்பு வேண்டும். கர்த்தாவே அதை எனக்கு அனுப்பும், அது என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது ஒரு முன்னனையில் வந்தாலும், அது ஒரு களஞ்சியத்தில் வந்தாலும், அது உலகத்திற்கு எவ்வளவு அவமானமாக காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, நான் உலகத்திற்கு எவ்வளவு அவமானமாக காணப்பட வேண்டியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை” என்றேக் கூறுங்கள். தேவனுடைய வரங்கள் எப்பொழுதுமே மனிதனை விசித்திரமாக நடந்துகொள்ளச் செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 196 மோசேயைப் பாருங்கள், ஒரு பெரிய வேத பண்டிதன், மகத்தான மேதை, ஆனால் ஒரு நாள் அவன் வனாந்திரத்தின் பின்பக்கத்தில் ஒரு ஒளியைச் சந்தித்தான். அப்பொழுது அவன் தன்னுடைய பாதரட்டைகளைக் கழற்றிப்போட்டான். இடுப்பு வரைக்கும் தாடி தொங்கிக்கொண்டிருந்த எண்பது வயதான ஒரு மனிதன், தன்னுடைய மனைவியையும், தன்னுடைய குழந்தையையும் ஒரு கோவேறு கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்திற்கு புறப்பட்டுச் சென்றான். ஒரு நாள் முழு சேனையுமே அவனுக்காக போரிட்டு ஜெயித்திருக்கும், ஆயினும் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. இப்பொழுதோ அவன் ஒரு கோணலான தடியுடன் மீண்டும் அந்த தேசத்தைக் கைப்பற்ற எகிப்திற்குச் செல்கிறான். ஏன்? அவன் அந்த இயற்கைக்கு மேம்பட்ட ஒளியைக் கண்டிருந்தான். 197 இன்றிரவு உங்களுடைய இருதயத்திலே உணர்த்திக் கொண்டிருக்கும் அந்த சிறு காரியம், அந்த இயற்கைக்கு மேம்பட்ட, இந்நாளின் ஒளியேயாகும். அது உங்களை இயேசு கிறிஸ்துவிடம் வழி நடத்த நீங்கள் அனுமதிப்பீர்களா? எது மாத்திரம் உங்களுக்கு ஜீவனை அளிக்க முடியும்? தங்களுடைய கரங்களை உயர்த்தாதவர் யாராகிலும் இருந்தால், "சகோதரன் பிரான்ஹாம் இப்பொழுது ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள்” என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரேனும், மற்ற எவரேனும் இருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாலிபனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறுயாரேனும் இருக்கிறீர்களா? வாலிபனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக். இன்னும் வேறு யாரேனும் இருப்பார்களா? 198 மேலும், "நான் பின்பற்ற விரும்புகிறேன். நான் கிறிஸ்துவாகிய விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பின்பற்ற விரும்புகிறேன். நான் பின்பற்ற, இந்த நாளில் என்னுடைய இயேசுவைக் கண்டறிய விரும்புகிறேன். இங்குள்ள எல்லா கிறிஸ்துமஸ் அலங்காரம் மற்றுமுள்ள காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள நான் விரும்புகிறேன், ஏனென்றால் என்றோ ஒரு நாள் அது அவியாத அக்கினியில் சுட்டெரிக்கப்படப் போகிறது,” என்று கூறுங்கள். இதைக் சகித்துக்கொள்ளாத அனைவருமே அதனுடன் கூட எரிக்கப்படுவார்கள். உலகமும், பாவியும் தண்டிக்கப்படுவர், அவர்கள் உலகத்தோடு அழிந்துபோவார்கள். உலகப்பிரகாரமாக அன்புகூருகிற ஜனங்களோ உலகத்தோடு அழிந்து போவார்கள். இன்னமும் உங்களுக்குள், உலகத்தின் அன்பு உங்களுக்கு இருக்குமானால், இன்றிரவு நீங்கள் உங்களை முற்றிலும் இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய வார்த்தைக்கும் விற்றுப்போட விரும்பினால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். கரத்தை எவரேனும் உயர்த்தாதிருந்தால் இப்பொழுது மீண்டும் உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் அதை அப்படியேக் கூறுகிறேன். பெண்மணியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 199 உங்களுக்குத் தெரியாது, ஒரு நிமிடத்தில் வேறுயாராகிலும் தங்களுடைய கரத்தை உயர்த்தலாம். நீங்களோ, "சகோதரன் பிரான்ஹாமே, அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?” என்று கேட்கலாம். மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையேயுள்ள வித்தியாசத்தையே உண்டு பண்ணுகிறது. 200 அந்தக் கரம் அந்த விதமாக உயர்த்தப்பட்டு, நீங்கள் அதை உண்மையான அர்த்தத்தில் செய்திருந்தால், அப்பொழுது உங்களுக்கு அருகில் ஏதோ ஒன்று உள்ளது. அது என்ன? அதுதான் நான் பேசிக் கொண்டிருக்கிற அந்த ஒளியாகும். அந்த ஒளிதான் அதை உங்களுக்குக் கூறுகிறது. “நான் தவறாய் இருந்து வந்துள்ளேன், உலகம் எனக்குள் இருக்கிறது. அது இனிமேல் எனக்கு வேண்டாம். நான் என்னுடைய கரங்களை உயர்த்துவேன்.” அது ஒரு சாட்சியாயுள்ளது. 201 நினைவிருக்கட்டும், ஒரு உயர்த்தப்பட்ட கரம் எதைக் குறிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு மொழியிலும், உயர்த்தப்பட்ட ஒரு கரமானது சரணடையும் ஒரு அடையாளமாகவே உள்ளது. நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தும்போது, எந்த இராணுவத்திலாவது, அல்லது வேறெங்காகிலும் நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தினால், அதுஅது சரணடைவதற்கான ஒரு சர்வதேச அடையாளமாயுள்ளது. 202 இன்றிரவு எத்தனைபேர் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "கர்த்தாவே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் ஒப்புவிக்கிறேன். நான் நான் முழுவதையும், நான் ஒப்புவிக்கிறேன்” என்று இந்த மேற்கோளை இப்பொழுதே கூறுவீர்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. அது அருமையாயுள்ளது., என்னே . 203 நாம் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, இசைப் பேழையை இசைப்பவர் இசைப் பேழையண்டை வருவாரா என்று நான் எதிர்பார்க்கிறேன். 204 பரலோகப் பிதாவே, “விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று கூறப்பட்டுள்ளது என்பதை நான் உணருகிறேன். கர்த்தாவே அவ்வளவு தான் தேவையாயுள்ளது. அவர்கள் உம்மை விசுவாசிப்பார்களேயானால், ஏதே ஒரு காரியம் சம்பவிக்க வேண்டும். அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் இந்த தேவனுடைய வார்த்தையின் சிறு ஊழியத்தின் வெற்றிச் சின்னங்களாயிருக்கிறார்கள்; இந்த சிறு விருந்தில் இன்றிரவு இங்கே இந்த அருமையான ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் ஒன்று கூடியுள்ளனர். ஆனால் இன்றிரவு நீர் இங்கிருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஒருகால் எங்களுடைய கண்களினால் காணமலிருக்கலாம், ஆனால் நாங்கள் அதை எங்களுடைய மற்ற புலனால் உணர்ந்தோம், எங்களுடைய உணர்வின் புலனால், எங்களுடைய இருதயத்தில் உள்ள உணருதலின் புலனால், எங்களுடைய மனசாட்சியினால் உணர்ந்துவிட்டோம். எங்களுடைய ஆத்துமா எங்களோடு பேசி, "நாங்கள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம்: அந்த மகத்தான கிறிஸ்துமஸ் வெகுமதி, தேவனிடத்திலிருந்து மனிதனுக்கு அளிக்கப்பட்ட உண்மையான முதல் கிறிஸ்துமஸ் வெகுமதி” என்று உரைத்தது. 205 நாங்கள் எல்லா வெகுமதிகளையும் பெற்றிருந்த போதிலும், எங்களில் அநேகர் அந்த மகத்தான வெகுமதியை இன்னும் பெற்றுக்கொள்ளவேயில்லை. அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கும்போது, தேவனே நாங்கள் இன்றிரவு அவர்களுக்காக ஜெபிக்கிறோம். எல்லாவற்றிற்கும் போதுமான இதுவே அவர்களுக்கு வேண்டும். பிதாவே, அவர்கள் அந்த வழியில் சார்ந்து கொண்டார்கள். ஒருகால்... 206 அந்த காலத்திலிருந்த ரபிகளும், அநேக போதகர்களும் கூட அந்த வழியில் சார்ந்துகொண்டார்கள், ஆனால் அவர்கள் அடியெடுத்து வைத்து வெளியேறி, ஒரே ஒரு முறை தங்களை ஒப்புவித்து, அதை விசுவாசித்து, செய்தியை, அந்த மணி நேரத்துக்கான வெளிச்சத்தை, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை ஏற்றுக்கொள்ள பயந்தனர். அநேகர் அவ்வாறு செய்தனர். 207 கர்த்தாவே, இன்றிரவு இங்குள்ள அநேகர், இந்த சிறு ஜனக் குழுவிலோ இருபது அல்லது முப்பது பேர் இருக்கின்றனர். நான் எண்ணிக்கையை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கூறியிருந்தால், என்னை மன்னியும். ஆனால் தேவனாகிய கர்த்தாவே, ஏறக்குறைய அவ்வளவு பேர் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்கள். தேவனே, அவர்களுக்கு இயேசுவை, அவர்களுக்கு அவர்களுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியை தந்தருளும். அவர்களுடைய ஜீவியத்தில் இது மகத்தான வேளையாயிருப்பதாக. அவர்கள் இன்றிரவு யோசேப்பைப் போல, "நான் ஏன் என்னுடைய கரத்தை உயர்த்தினேன்? என்னை அதைச் செய்யும்படிச் செய்தது எது? நான் அதை எப்படிச் செய்ய முன் வந்தேன்? அதே சமயத்தில் நான் அநேக ஆண்டுகளாக ஒரு கிறிஸ்தவனாக உரிமை கோரி வந்துள்ளேன், ஆனால் ஏதோ ஒன்று என்னுடைய கரத்தை உயர்த்தும்படிக்கு கூறினது” என்று இந்தக் காரியங்களை தங்களுடைய இருதயத்தில் ஆழ்ந்து யோசித்துப் பார்த்துக் கொண்டே வீட்டிற்கு செல்வார்களாக. கர்த்தாவே, சபை அங்கத்தினர்கள், ஊழியக்காரர்களும் கூட தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள். நீர் இந்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும். 208 கர்த்தருடைய தூதன் வந்து, “பயப்படாதிருங்கள், இதுவே இந்நாளுக்கான ஒளியாயுள்ளது. இதுவே இந்த வேளைக்கான ஒளியாயுள்ளது. சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன” என்று கூறுவாராக. தீர்க்கதரிசியோ, “சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்” என்றார். கர்த்தாவே, நாங்கள் சூரிய அஸ்தமனத்தைக் காண்கிறோம், அது சீக்கிரத்தில் நித்தியத்திற்குள் இணைந்துவிடும். கர்த்தாவே, இவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டடைய அருள்புரியும். நான் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 209 நாம் நம்முடைய காலூன்றி எழும்பி நிற்கையில், நாம் நம்முடைய கரங்களை இந்த விதமாக ஒரு ஒப்புக்கொடுக்கும் முறையில் உயர்த்துவோமாக. 210 நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். சற்று முன்னர் உங்களுடைய கரத்தினை உயர்த்தினவர்களே, நான் - நான் உங்களுக்காக ஜெபித்தேன். எனக்கு செய்யத் தெரிந்ததெல்லாம் ஜெபிப்பதுதான். நான் உங்களுக்காக விசுவாசிக்கப் போகிறேன். நான் கேட்டுக்கொண்டது எதுவோ, அவர் அதை எனக்குத் தருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால் அவர் தருவதாக வாக்களித்துள்ளார். அவரால் பொய்யுரைக்க முடியாது. அவரால் பொய்யுரைக்க முடியாது. அது சம்பவிப்பதைத் தடுக்கிற ஒரேக் காரியம்--காரியம்... என்னுடைய அவிசுவாசமே. நீங்கள் அதை உண்மையாகவே செய்தீர்கள் என்றே நான் உங்களுக்காக விசுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தரப்போகிறார். அவர் அதை உங்களுக்குத் தரப்போகிறார், ஏனென்றால் நீங்கள் அதற்காக வேண்டுக் கொண்டீர்கள், நீங்கள் ஒப்புக்கொடுக்க விரும்புகிறீர்கள். 211 நீங்கள் அப்படி செய்திருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் விசுவாசங்கொண்டுள்ள ஒரு நல்ல சபையைக் கண்டறிந்து, நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அந்த விதமான ஒரு சபையில் இருந்தால், போய் உங்களுடைய போதகரிடத்தில், “நான் அன்றொரு இரவு ஒரு சிறு கூட்டத்தில் என்னுடைய கரங்களை உயர்த்தினேன்,” என்பதை அவரிடம் கூறுங்கள். அது எந்த இடத்தில் நடந்த கூட்டம் என்று கூட நீங்கள் அவரிடத்தில் கூற வேண்டியதில்லை . ஆனால், “நான் என்னுடைய கரங்களை உயர்த்தினேன், போதகரே, நீர் என்னோடு ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான்-நான்-நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அது தேவை. நான் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் ஜீவிப்பதற்கு அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் அதைப் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும்! நான் அந்த ஒளியைப் பார்த்துவிட்டேன்” என்று கூறுங்கள், ஓ, தேவன் அதை உங்களுக்கு அருளுவார். நீங்கள் இப்பொழுதே அதை செய்வீர்களா? 212 இப்பொழுது இங்குள்ள ஒவ்வொருவரும், நாம், "நான் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு, என்னுடைய இரட்சகருக்கே எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்,” என்று பாடப் போகிறோம். நாம் பாடுகையில் நம்முடைய கண்களை மூடி, இப்பொழுது நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் உமக்கே, என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகருக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் உமக்கு, என்னுடையஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகருக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 213 நீங்கள் அதை பொருளுணர்ந்து கூறுகிறீர்களா? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், "ஆமென்” என்கின்றனர். - ஆசி.) இப்பொழுது நான் உண்மையாகவே நீங்கள் இனிமையான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிற யாருடனாவது, அவர்களுடைய கரத்தினைக் குலுக்கி, "சகோதரனே, நான் அதை உண்மையான அர்த்தத்தில் கூறினேன். எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். நாம் அதைச் செய்வோமாக, அதை இப்பொழுதே ஒன்று சேர்ந்து உடனே செய்வோமாக. (சகோதரன் பிரான்ஹாம் மேடையின் மீது உள்ளவர்களிடத்தில் பேசுகிறார்.-ஆசி.] சகோதரனே, நான் அதை பொருளுணர்ந்தே கூறினேன். எனக்காக ஜெபியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் என்னை .. ஆசீர்வதிப்பாராக.அது நன்றாயுள்ளது. அது அருமையாயுள்ளது., அது உங்களை நன்கு உணரச் செய்கிறதல்லவா? நான் அதை பொருளுணர்ந்தேக் கூறினேன். 214 இப்பொழுது நாம் உண்மையாகவே நம்முடைய இருதயத்திலிருந்து, நாம் அதை பொருட்படுத்திக் கூறி, நாம் எல்லாவற்றையும் ஒப்புவிப்போம், நம்முடைய சொந்த சித்தத்தை, நம்முடைய சொந்த வழிகளை, நமக்குண்டான ஒவ்வொன்றையும், நாம் கிறிஸ்துவுக்கு ஒப்புவித்து, நாம் நம்முடைய கரங்களை மீண்டும் உயர்த்திப் பாடுவோம். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், எல்லாவற்றையும் உமக்கு, என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகருக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 215 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்திப் பாடுவோமாக. (சகோதரன் பிரான்ஹாம் நான் எல்லாவற்றை ஒப்புவிக்கிறேன் என்று வாய்திறவாமல் மௌனமாக பாடத் துவங்குகிறார்.--ஆசி.) இப்பொழுது அப்படியே உங்களுடைய சிந்தையை அவர் மேல் வையுங்கள். "நான்...” தேவன் தாமே ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கில் எழுந்த, கிழக்கிலிருந்து உதித்த தம்முடைய நட்சத்திரத்தை அனுப்பி, வார்த்தை மாம்சமானவரிடம் உங்களை வழி நடத்துவாராக என்னும் மிக்க மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். (சகோதரன் பிரான்ஹாம் நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன் என்று தொடர்ந்து மௌனமாக வாய்திறவாமல் பாடுகிறார்.)நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், (தேவனண்டை கரங்களை உயர்த்துவோம்), எல்லாவற்றையும் உமக்கு, என்னுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகருக்கே, நான்... டோனி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.